டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட டி.ஆர்.பாலு வீட்டில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் மரணம்
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி,டி,சி கோட்ரஸ் குடியிருப்பில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் ராஜேஷ் (வயது-35), ஏழுமலை (வயது-35) இருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீவிபத்து
தி.நகர் ரங்கநாதன் தெருவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்னை ஃபுட் கோர்ட் ரெஸ்டாரண்டில் இன்று காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.