Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள்

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • News18 Tamil
 • | January 18, 2022, 18:26 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:25 (IST)

  இன்றைய டாப்10 செய்திகள்

  1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

  2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  4) மலேசிய தலைநகர் கோலாலம்பூர் முருகன் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலம். பால்குடம், காவடி சுமந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

  5) புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை. கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.

  6) கனிமவளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வுகளை அமைக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

  7) நாடு முழுவதும் வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு.

  8) பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் இந்து முன்னணி அமைப்பினர் குண்டர் சட்டத்தில் கைது. கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை.

  9) பூஸ்டர் தடுப்பூசி போட நாளை மறுதினம் சிறப்பு முகாம். 600 இடங்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

  10) தரிசனத் தடையால் முருகன் கோயில்களில் களையிழந்த தைப்பூசத் திருவிழா. பழனி, திருச்செந்தூரில் கோயில் வாசல்களில் வழிபாடு நடத்தும் பக்தர்கள்.

  18:18 (IST)

  கொரோனா பரவல் அதிகரிப்பால், சென்னை சா்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு முனையங்களில் பணியாற்றும் ஊழியா்களில், ஐம்பது சதவீத ஊழியா்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. 

  18:17 (IST)

  நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழாவின் தேரோட்டம் காலையில் தொடங்கியது. கோவிலுக்குள் ஒரு சில பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட சூழலில், காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  18:16 (IST)

  சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 வயது சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஊழியர்கள் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள சூழலில், வரும் 31ம் தேதி வரை வண்டலூர் பூங்கா மூடப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி ஆண் சிங்கம் ஒன்று உணவு குழாய் பிரச்னையால் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. அந்த சிங்கத்திற்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று அறிய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. 

  18:15 (IST)

  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூரில், பொதுப்பாதை வழியாக அருந்ததியினரின் இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றது தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், 15 நாட்களில் அருந்ததியின மக்களுக்கு சொந்தமான மயான பாதையை சரிசெய்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கூறியுள்ளார். 

  18:15 (IST)

  சென்னையை அடுத்த அம்பத்தூரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண்டலம் 7 அம்பத்தூர் பன்னீர் செல்வம் தெருவில் சைக்கிளில் சென்ற சிறுவனை, தெருநாய்கள் விரட்டியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்ப சைக்கிளை வேகமாக ஓட்டிய சிறுவன் கீழே விழுந்து காயமடைந்தான். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து நாய்களிடம் இருந்து சிறுவனை மீட்டுள்ளனர்.

   
  18:14 (IST)

  நாகை அருகே நேரடி கொள்முதல் நிலையத்தின் முன் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்தன. திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில், அதன் வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை பெய்த மழையால் நெல் மூட்டைகளும், குவியல் குவியலாய் குவித்து வைத்திருக்கும் நெல்மணிகளும் நனைந்தன.

   
  18:14 (IST)

  புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா


  புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்தை கடந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக ஒரே நாளில் 2093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 10,393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  18:13 (IST)

  உலகப் புகழ்பெற்ற மின்சார கார் நிறுவனமான டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யவருமாறு அதன் நிறுவனர் எலான் மஸ்கிற்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாக அதன் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார்

  18:12 (IST)

  கொரோனா நோயாளிகளுக்கு 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அவர்களை காசநோய் பரிசோதனைக்கு அறிவுறுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவு 90 முதல் 93 சதவீதம் உள்ளவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.