Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம்

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • | January 12, 2022, 18:17 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 12 DAYS AGO

    AUTO-REFRESH

    18:17 (IST)

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( இஸ்ரோ ) பத்தாவது தலைவராகவும், விண்வெளி துறையின் செயலாளராகவும் மூத்த ராக்கெட் விஞ்ஞானி எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார் . ஜனவரி 14-ம் தேதி உடன் கே.சிவன் பதவி காலம் முடிவடைய உள்ளது.

    17:49 (IST)

    தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளது. 100 அயல் மொழியில் திருக்குறள் மொழிமாற்றம் செய்து எடுத்து செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம் - பாஜக தலைவர் அண்ணாமலை

    17:25 (IST)

    தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மீது எப்போதும் எனக்கு ஆச்சரியம் இருந்துகொண்டே இருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி

    17:21 (IST)


    பனராஸ் பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதிக்காக ஒரு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தவரும் தமிழை கற்றுக் கொள்ள இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

    16:28 (IST)

    தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    16:1 (IST)

    தமிழகத்தில் இயற்கை வனத்துறை என்ற புதிய துறை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இயற்கை வளத்துறையின் கீழ் புவியியல், சுரங்கத்துறை இயக்குநரகம் கொண்டு வரப்படும். தமிழ்நாடு கனிமவளம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனமும் இந்த துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

    14:20 (IST)

    அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் திருக்கோவில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பொங்கல் கருணை கோடி ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    13:39 (IST)

    பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

    13:0 (IST)

    பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் முதல் முறையாக  வரும்  கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில்  2ம் ஆண்டில் (lateral entry ) முறையில் பொறியியல் படிப்பில்  நேரடியாக சேர்க்கப்பட உள்ளனர் .

    13:0 (IST)

    புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபத்தை  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.