Tamil News Live | இன்றைய (ஜனவரி 11) டாப்10 செய்திகள்

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • News18 Tamil
 • | January 11, 2022, 18:42 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 8 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:41 (IST)

  இன்றைய டாப்10 செய்திகள்

  1) ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அதற்கு பதிலாக வரும் 29-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிப்பு. 

  2) மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றம். வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்.


  3) ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டரை மணி தாமதமாக தொடக்கம். 

  4) மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

  5) பொங்கல் தொகுப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒபிஎஸ் - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

  6) பொங்கலுக்கு பின் முழுஊரடங்கு தொடர வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

  7) பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்புவர்களுக்கு 17-ம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு. 16-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

  8) பல்வேறு மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான 11 உலோக சிலைகள் சென்னையில் மீட்பு. 

  9) உ.பி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அமைச்சர் ராஜினாமா. பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. 

  10) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறல்.

  15:37 (IST)

  பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து


  சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே  பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக ஒதுக்கீடு வழங்க கோரி  பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

  15:16 (IST)

  கிருஷண்கிரி மாவட்டம் ஓசூரில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அடிப்படை வசதிகளுடன் மூன்று இடங்களில் தற்காலிக உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. 

  14:5 (IST)

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி மாற்றம


  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். வரும் 16-ம் முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

  13:38 (IST)

  இந்திய அணி பேட்டிங் தேர்வு... அணியில் 2 முக்கிய மாற்றங்கள


  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் ஹனும விஹாரி அணியில் இடம்பெறவில்லை. இதேபோல் சிராஜ்க்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

  இந்திய அணி : கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜெங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்

  13:22 (IST)

  ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க பொது நலமனு தாக்கல்

  தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த இடை கால தடை விதிக்க வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது.


   

  12:42 (IST)

  தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

  12:4 (IST)

  பழனியில் நாளை தைப்பூச கொடியேற்றம்

  கொரோனா மூன்றாம் அலை பரவலைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதும் ஒன்றாகும். 3 நாட்கள் தடை முடிவடைந்த நிலையில் அதிகாலை முதலே பழனிக்கு காவடி தூக்கிக் கொண்டு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவை காண முடியாதோ என்ற அச்சத்தில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையை பாதியில் முடித்து பேருந்துகளில் பழனி நோக்கி வருகின்றனர். இவர்கள் இளைப்பாற கோயில் நிர்வாகம் சார்பில், பந்தல், குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பொட்டலங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

  12:3 (IST)

  2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்

  சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத 2 ஆயிரத்து 177 பேர், பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு நேற்று அமலானது. இதையடுத்து அதிகாரிகள் ரயில் நிலைய நுழைவாயிலில் நின்று பயணிகளின் தடுப்பூசி சான்றுகளை ஆய்வு செய்தனர். இதனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் அதற்கான சான்று இல்லாமல் அலுவலகம் செல்ல வந்தோர் கடும் அவதிக்கு ஆளாயினர். முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து, 15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

  12:2 (IST)

  ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

  கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை அறுத்து எறிந்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் சுமார் 600 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்தநிலையில் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே 50க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல் மூலம் தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதி உள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் அங்கு இருந்த வலைகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.