Tamil News Live | இன்றைய (ஜனவரி 06) டாப் 10 செய்திகள்

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • News18 Tamil
 • | January 06, 2022, 18:45 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 9 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:42 (IST)

  இன்றைய டாப் 10 செய்திகள்

  1) மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த 'மோடி பொங்கல்' விழா ரத்து செய்யப்பட்டுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  2) நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  3) ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்து குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

  4) எந்த விதமான கட்டமைப்பு பணிகளும் இல்லாததால் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம். 

  5) துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க சட்ட திருத்த மசோதா. வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என முதல்வர் அறிவிப்பு

  6) 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தை அமைச்சர்கள் ஆய்வு. 66 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதால் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

  7) மோடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. பாதுகாப்பு காரணத்திற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து மாற்றம்.

  8) வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிப்பு. தேர்வாளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்பு.

  9) குடியரசு தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு. பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம்.

  10) தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல். சென்னையில் மட்டும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

  18:13 (IST)

  இத்தாலியில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகள் வந்தனர். அவர்களுக்கு நிலையான வழிகாட்டுதல்கள்படி, கொரோனா பரிசோதனை செய்ததில் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

  18:12 (IST)

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த , 40கட்டடங்கள் இடிக்கப்பட்டன. வெண்ணந்தூர் ஒன்றியதுக்கு உட்பட்ட வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகளை கட்டி பயன்படுத்தி வந்தனர். நீர்நிலைகளை அக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை, அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. எனினும் சிலர் கட்டடங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இன்று கட்டடங்களை இடித்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்

  17:33 (IST)

  தமிழகத்தில ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்தை கடக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் இன்று ஒரு நாள் பாதிப்பு 3 ஆயிரத்தை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

  16:9 (IST)

  முட்டை விலை குறைவு

  நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகள் என்ற நிலையில் இருந்தது. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளாவிற்கு அனுப்பப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் முட்டையின் தேவை குறைந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு முட்டை கொள்முதல் விலையை 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 80 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்துள்ளது.

   
  15:46 (IST)

  டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்

  ஜனவரி 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் திட்டமிட்டப்படி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய அரசு உடன் ஆலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

  13:27 (IST)

  வயிற்று வலிக்கு மெடிக்கலில் மருந்து சாப்பிட்ட 2 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

  திருச்சி ஜம்புநாதபுரத்தில் வயிற்று வலியால் துடித்த இரண்டரை வயது குழந்தைக்கு  மெடிக்கலில் மருந்து வாங்கி தாய் கொடுத்துள்ளார். மருந்து சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து  ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுபோன்று மருத்துவரின் ஆலோசனை இன்றி நோயாளிகளுக்கு மருந்துகளை தானாகவே வாங்கிக் கொடுக்க வேண்டாம் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

  12:3 (IST)

  விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை 

  விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும்  என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புடைந்து வருவதால் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்ய பலர் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

  11:26 (IST)

  நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகது உள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

  11:24 (IST)

  நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு

  நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி குழுவை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நீட் விவகாரத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.