Tamil News Live | இன்றைய (ஜனவரி 05) டாப் 10 செய்திகள்

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • | January 05, 2022, 18:37 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    9:41 (IST)

    சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வு

    காலை 10மணிக்கு சட்டப்பேரவை தொடங்கும்..

    பேரவை தொடங்கியதும் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்படும்

    பின்னர், மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ அலுவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம்,  கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    பின்னர் வினாக்கள் விடைகள் நேரம் நடைப்பெறும்..இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசுவார்கள்..இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர், துரைமுருகன், கே.என்.நேரு,ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பதிலளித்து பேச உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது..

    குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகள் தொடர்பான சட்டமுன்வடிவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்கிறார்.

    2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்பு( திருத்தச் ) சட்டமுன்வடிவை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்கிறார்...

    பின்னர்,நேரம் இல்லா நேரத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது..

    அந்த வகையில், மழை நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு தொகை, நீட் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள்.

    அத்துடன் இன்றைய சட்டப்பேரவை நிறைவு பெறும்

    9:26 (IST)

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது


    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்டசமாக மகாராஷ்டிராவில் 26,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    18:38 (IST)

    இன்றைய (ஜனவரி 05) டாப் 10 செய்திகள்

    1) தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    2) வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு. பொது போக்குவரத்து, மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிப்பு. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இருக்கும்.

    3) 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை. மருத்துவ கல்லூரி தவிர பிற கல்லூரிகளுக்கு 20-ம் தேதி வரை விடுமுறை.

    4) வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழாக்கள் ஒத்திவைப்பு.

    5) பொது பேருந்து மற்றும் புறநகர் ரயில்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. 

    6) பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாபில் பாதியிலே பயணத்தை ரத்து செய்து திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. சாலையில் போராட்டம் நடத்த விவசாயிகள் குவிந்ததால் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை. 

    7) தன்னை உயிருடன் திருப்பி அனுப்பி வைத்தற்கு பஞ்சாப் முதலமைச்சரிடம் பிரதமர் கூறியதாக தகவல். டெல்லி திரும்பும் போது விமான நிலையத்தில் ஊழியர்களிடம் விமர்சனம்.

    8) காரில் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடாகவில் கைது. அடைக்கலம் கொடுத்த 5 பேரையும் கைது செய்தது தனிப்படை போலீசார்.

    9) நீட் தேர்வு தேவையற்றது என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

    10) ஜோகன்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்கு.

    18:2 (IST)
     

    ஞாயிற்று கிழமை சென்னை புறநகர் ரயில்சேவை செயல்படும் 

    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறநகர் ரயில் சேவை இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய பணியாளர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் ரயில்வே சேவை பெறுவோர் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

    17:39 (IST)

    193 பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு... TNPSC முக்கிய அறிவிப்பு

    தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு மற்றும் வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 9-ம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தடுப்பூசி கிடங்கு ஊழியர் உள்ளிட்ட 193 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் மாற்று தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:25 (IST)
    ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும்.
    1) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
    2) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
    3) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
    4) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    5) கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    6) உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    7) அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    8) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.  
    9) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
    10) அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
    11) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
    16:24 (IST)
    இதர கட்டுப்பாடுகள்
    1) மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
    2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
    3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
    4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
    5) பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
    6) பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. 
    7) பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
    8) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
    9) அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
    10) அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
    11) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.
    12) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
    13) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
    14) மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    15) தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    16) கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.  
    17) அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    18) ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்
    16:24 (IST)
    வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.  இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.   
    • பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.
    • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
    • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
    16:23 (IST)
    1) மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும்  ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. 
    எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும்  அனுமதிக்கப்படும். 
    • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்
    • மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.)
    • அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். 
    • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 
    • உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது
    13:40 (IST)

    ராஜேந்திர பாலாஜி கைது

    பணமோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூர் அருகே கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.