Tamil News Live: புதுக்கோட்டையில் குண்டடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Breaking News Live Updates | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

 • News18 Tamil
 • | January 03, 2022, 18:43 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 9 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:39 (IST)

  புதுக்கோட்டையில் குண்டடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம்பகுதியை சேர்ந்த புகழேந்தி என்ற சிறுவன் துப்பாக்கி குண்டு தலையில் தாக்கியதில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐந்து நாட்கள் தொடர் தீவிர சிகிச்சையில் இருந்தும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

  18:39 (IST)

  புதுக்கோட்டையில் குண்டடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம்பகுதியை சேர்ந்த புகழேந்தி என்ற சிறுவன் துப்பாக்கி குண்டு தலையில் தாக்கியதில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐந்து நாட்கள் தொடர் தீவிர சிகிச்சையில் இருந்தும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

  18:4 (IST)

  பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போடப்படும் - அமைசர் அன்பில் மகேஷ்

  15 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் 1200 பள்ளிகட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

  16:26 (IST)

  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் -  உயர் நீதிமன்றம்

  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல்ஆணையம் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமரா பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாநில தேர்தல் ஆணையம் அளித்த ஒப்புதலை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

  15:6 (IST)

  பிரதமர் மோடி தமிழகம் வருவதை  வரவேற்கிறோம் - அமைச்சர் நாசர்

  ஆவடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை தமிழக தமிழக  பால் வளத்துறை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார்.

  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓமைக்ரான் பரவல் தடுப்பதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.மோடி தமிழக வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் மோடி வருவதை வரவேற்கிறோம் அவர் நல்ல காரியதிற்காக வருகிறார் எனவே வரவேற்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

  14:7 (IST)

  மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்றும், இதர கட்டணங்களுக்குதான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதுவும் 2018 முதல் நடைமுறையில் உள்ளதாக புதிதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  13:31 (IST)

  தமிழகத்தில் மருத்துவ சீட் இரண்டு மடங்காக அதிகரிப்பு - அண்ணாமலை

  தமிழகத்தில் மருத்துவ சீட் சென்ற 2014ல் இருந்து 2021 வரை  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு பாசம் காதல் குறையாம்  இருந்து வருகிறது. ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது.தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  13:22 (IST)

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

  மணிமுத்தாறு பகுதியில் மறுகால் பகுதியை இரண்டடி உயர்த்தியதால் நெல் நாற்று இந்த இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் தண்ணீர் மூழ்கியதாகவும் அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டி உள்ளார்.

  13:15 (IST)

  இந்திய அணி பேட்டிங் தேர்வு... விராட் கோலிக்கு ஓய்வு, கே.எல்.ராகுல் கேப்டன்

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற வில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார். விராட் கோலிக்கு டெஸ்ட் அணியில் இல்லை என்றால் எப்போதும் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார். இந்த முறை கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

  12:14 (IST)

  மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை

  சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்குழு தனது அறிக்கையை முதலமைச்சரிடம்  தாக்கல் செய்துள்ளனர். 


  சென்னையில் அதிகம் மழை தேங்கும் பகுதிகளை புகைப்படத்துடன் இந்த குழு சமர்ப்பித்துள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கிய உடன் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து இந்த 14 பேர் கொண்ட குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.