Latest Tamil News (April 19): தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | April 22, 2021, 08:09 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 23 DAYS AGO

  AUTO-REFRESH

  18:14 (IST)

  பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு ரத்து 

  கந்துவட்டி கொடுமை சம்பவம் தொடர்பாக கார்ட்டூன் வரைந்த புகாரில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

  17:49 (IST)

  இந்தியன் - 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் வெளியீடு

  இயக்குநர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியாத நிலையிலும் விவேக் மரணமடைந்ததால் அவர் தொடர்பான காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனுடன் விவேக் இந்த ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்துள்ளார்.

   
  17:46 (IST)

   ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன்!

  அதிகரித்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, வரும் 22ம் தேதி முதல் குறிப்பிட்ட 9 தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தவும், அதனை மருத்துவமனைகளுக்கு மாற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரயில் பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

  17:45 (IST)

  சுற்றுலா தலங்கள் நாளை முதல் மூடல்

  நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அதுதொடர்புடைய வேலைகளை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், நாளை முதல் சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஒட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, சுற்றுலா தடை குறித்து, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  16:56 (IST)

  கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை.நாடு முழுவதும் கொரனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை

  16:55 (IST)

  சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி  வந்த ரூ. 33 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் பறிமுதல்.  இது தொடர்பாக 2 பேரிடமும்  சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

  16:54 (IST)

  கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பை  சேர்ந்த இருவர் கைது்.

  16:3 (IST)

  பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு 

  உச்சநீதிமன்ற உத்தரவுபடி,   சாலை ஓரங்கள்,  சாலை நடுவில், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி  தலைவர்கள்  சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  15:33 (IST)

  இன்று முதல் மின்னணு பதிவு கட்டாயம் 

  தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கு இன்று முதல் மின்னணு பதிவு கட்டாயம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் கேரளாவில் 13 ஆயிரத்து 835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு மாநில எல்லைகளில் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் கேரள அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மின்னணு பதிவு பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் கேரளாவிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்

  15:32 (IST)

  நெல்லையில் பலத்த காற்றுடன் மழை

  நெல்லை மாநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது பலத்த காற்று வீசியதால், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே பனை மரம் முறிந்து அங்கிருந்த கார் மீது விழுந்தது. தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் சாலையில் மரம் முறிந்து விழுந்த காரணத்தினால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது