Latest News Live: பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - நீட் தேர்வு ரத்து செய்யவும், ஏழு பேரை விடுவிக்கவும் கோரிக்கை

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 17, 2021, 18:55 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    22:2 (IST)


    சென்னை அரும்பாக்கம் தனியார் விடுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் பத்ரி என்ற இளைஞர் கொலை

    நூறடி சாலையில் அமைந்துள்ள அந்த விடுதியில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    அரும்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    21:4 (IST)

    பரமக்குடியில் நிவாரணப் பொருட்களை வாங்க சமுக இடைவெளியை மறந்து  பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
     

    19:9 (IST)

    பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - நீட் தேர்வு ரத்து செய்யவும், ஏழு பேரை விடுவிக்கவும் கோரிக்கை
    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை.மேலும் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளார்.

    17:52 (IST)

    சிவசங்கர் பாபாவை 15 நாட்கள்  சிறையில் அடைக்க உத்தரவு

    சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு. பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டுள்ளார்.

    15:56 (IST)

    கேபிள் ஆப்ரேட்டர் அரசு செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கவில்லை என்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்-  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 

    பொதுமக்களுக்கு கேபிள் ஆப்ரேட்டர் சேவை வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பொதுமக்களுக்கு அரசு செட்டாப் பாக்ஸ்  வழங்காமல், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ் வழங்கி கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

    அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


    14:45 (IST)

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது  தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வருகின்றன. 
    அந்த ஆலோசனைகளின்   அடிப்படையிலும் சி.பி.எஸ்.சி எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து  அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.

    10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனி தேர்வர்களையும் கவனத்தில் கொண்டுள்ளோம் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது அவர்களுக்கு தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

    தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம்.அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து  முடிவெடுக்கப்படும் என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    13:18 (IST)

    கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைனில் புகார். நடிகர் ரகுவரன், நடிகை ரோகிணி குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதாக புகார்.

    13:12 (IST)

    சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில்  கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல். சசிக்கலாவை கண்டிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    12:41 (IST)

    தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் 

    தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

    12:33 (IST)
    டெல்டா விவசாயிகள் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு