Latest Tamil News (May 12): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 12, 2021, 14:29 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    14:05 (IST)

    ப்ளஸ்2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர கண்டிப்பாக நடத்தப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

    13:58 (IST)

    சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வியாளர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    12:15 (IST)

    சேலம் சென்னை பயணிகள் விமான சேவை நாளை முதல் வரும் 22ந் தேதி வரை ரத்து.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.  இதன் காரணாமாக மாநிலங்களில் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்ய பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சேலத்திலிருந்து சென்னை செல்லும் தனியார் (ட்ரு ஜெட் ) விமான சேவையும் தற்காலிகமாக நாளை (13 ம் தேதி) முதல் 22 ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா தகவல்.

    12:13 (IST)

    ஹைதராபாத்தில் இருந்து ரஜினிகாந்த் தனி விமான மூலம் சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் 

    12:13 (IST)

    தமிழகம் புதுவை  மாநில எல்லை மூடல்-புதுவை போலீசார் சோதனை

    12:13 (IST)

    சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள்  குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைப்பு

    12:12 (IST)

    தனிப்பட்ட வருத்தம், எனக்கு நீங்கள் அவை தலைவர் என்பதால் கட்சியின் அரசியல் சூழலை பயன்படுத்தி கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. கழக பணி செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தம் இருந்தாலும் கூட இந்த இடத்திற்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். - தமிழக முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின் 

    12:11 (IST)

    சட்டப்பேரவையை அதிகார அமைப்பாக கருதாமல் சமூகத்திற்கு நல்லது செய்யும் அவையாக கருதவேண்டும்; கருத்துக்களை கருத்துகளாக எதிர்கொள்ளும் வல்லமை உண்டே தவிர அதில் வன்மம் இருக்காது.  - தமிழக முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின் 

    10:37 (IST)

    புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சிப்பதா? மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்" - திமுக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்.

    10:28 (IST)

    நெல்லை மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன் எடுத்தவர் சபாநாயகர்.  நீண்ட அனுபவம் கொண்டவர் துணை சபாநாயகர். இருவரும் சேர்ந்து இந்த மண்ணுக்கு பெருமை சேருங்கள் - காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேரவையில் வாழ்த்து பேச்சு