Latest Tamil News (May 13): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்
Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.
சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் - சித்த மருத்துவர் வீரபாபு ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி 300 படுக்கைகளை சித்த மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை வர்த்தக மையத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகளும், 200 சாதாரண படுக்கைகளும் சித்த மருத்துவம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
13:13 (IST)
நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
13:13 (IST)
நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
12:39 (IST)
கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்.முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்வதாக புகார்.
12:26 (IST)
கொரோனா நிவாரண நிதியாக ரூ. 25 ஆயிரத்தை மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியான எம்.வி.முரளிதரன் வழங்கினார்.நிதியுதவியை காசோலை மூலமாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதியின் குடும்பத்தினர் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். - வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்
12:8 (IST)
கோவை கோ இன்டியா கட்டிட வளாகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்