Latest Tamil News (May 19): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 19, 2021, 08:12 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:15 (IST)

    கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்களையும் முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

    14:13 (IST)

    18 வயதினருக்கு மேல் தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை திருப்பூரில் துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    14:11 (IST)

    ராமநாதபுரம் அருகே ஏர்வாடி மனநல காப்பகத்தில் உள்ள  மனநோயாளிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

    13:15 (IST)


    முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப்பணிக்கு மட்டுமே செலவிடப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    13:14 (IST)

    ரூ. 2,650 கோடிக்கான கொரோனா நிவாரண திட்டங்களை கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

    13:14 (IST)

    கர்நாடகத்தில் டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. - முதல்வர் எடியூரப்பா

    13:14 (IST)


    கர்நாடகத்தில் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கப்படும் - முதல்வர் எடியூரப்பா

    13:13 (IST)

    தென்மேற்கு பருவமழை காலம்  தெற்கு அந்தமான் கடற்பகுதியில் முன்கூட்டியே வரும் 21 ஆம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    13:12 (IST)

    இ_பதிவு சேவை கட்டாயமாக்கிய பின்பு சென்னையில் நேற்று ஒரே நாளில் 5428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    13:10 (IST)

    கொரோனா ஊரடங்கு காரணமாக  தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது எப்படி? நாளை யோசனைகளை தெரிவிக்க தமிழக அரசுக்கும், மனுதாரர் சிவாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. உணவு, குடிநீர் கிடைக்காமல் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதர்ஸ் ஆஃப் அனிமல்ஸ் அறக்கட்டளை தலைவர் சிவா என்பவர் வழக்கு.