Latest Tamil News (May 04): டெல்லியில் 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 04, 2021, 12:52 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:17 (IST)

    மும்பையிலிருந்து  கோவீஷீல்டு 2,00,000 டோஸ் 20,000 பாட்டில்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது

    13:3 (IST)

    சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் படுக்கை வசதி இல்லை - 108 ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை

    13:0 (IST)

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஐபிஎல் விதிகளின்படி அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது.

    13:0 (IST)

    ஐதராபாத் அணி வீரர் விருத்திமான் சாஹாவுக்கு கொரோனா

    12:50 (IST)

    டெல்லியில் 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

    12:46 (IST)

    கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.  வருகிற 29-ஆம் தேதி வரை இருக்கும். தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை.

    12:41 (IST)

    கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில்.. கடலோர மாவட்டங்களில் 4 - 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்

    12:20 (IST)

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை

    11:58 (IST)

    திருவள்ளூரில் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்த நபர் தப்பி ஓட்டம். நகராட்சி வீட்டு முகவரியில் தேடிச்சென்ற நகராட்சி ஊழியர்கள் ஏமாற்றம். 

    அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் தான் கோவையில் இருப்பதாக கூறி மிரட்டுவதால் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அதிர்ச்சி.

    Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.