கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இலவச மூலிகை பொடிகளை வழங்கி வரும் மதுரை காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ்-க்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தனது வழக்கமான பணி சூழலுக்கு இடையே, தன்னார்வலர்கள் உதவியுடன் சித்தா மூலிகை பொடிகளை தயாரித்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்தே வழங்குகிறார். இதற்கு நல்ல பலன் கிடைப்பதாக கூறி, உள்ளூர் மட்டும் இன்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து மூலிகை பொடியை வாங்கிச் செல்கின்றனர். அத்துடன், 7358816622 செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் முகவரியை பதிவிட்டால், வீடு தேடியும் வருகிறது.