Latest Tamil News Live : தமிழ்நாடு முதல் உலகம் வரை கொரோனா செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | April 28, 2021, 15:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 14 DAYS AGO

    AUTO-REFRESH

    17:39 (IST)

    மே1 ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    17:36 (IST)

    புதுச்சேரி காவல்துறையில் இரண்டு காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 96 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    15:22 (IST)

    கொரானா தொற்று பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை.  ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டிஜிபி திரிபாதி கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா  பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடரவும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

    15:12 (IST)

    வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணைம்.முகக்கவசம், கிருமி நாசினி,கையுறை, பேஷ்ஷீல்டு கட்டாயம். அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - தேர்தல் ஆணையம் 

    15:8 (IST)

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி செல்கின்றனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க மருத்துவர்கள் பரிதுரைத்துள்ளனர். 

    15:8 (IST)

    "ரெம்டெசிவிர்" உயிர் காக்கும் மருந்து இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வரவேண்டுமென தனியார் மருத்துவமனைகள் கூறுவது சரியான முன்னுதாரணம் அல்ல என்றும் கூறினார்.

    15:8 (IST)

    அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். "நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்" என்ற பெயரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மக்களின் உயிரைக் காப்பதில் அலட்சியம் வேண்டாம் என்றும் வரலாற்றுப் பழிக்கு ஆளாகாதீர்கள் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    15:7 (IST)

    சென்னை பெருநகரத்திற்குட்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் விடுதிகள் தேவையான வசதிகளுடன் கோவிட் பராமரிப்பு மையங்களை தனிப்பட்ட முறையில் தொடங்க அனுமதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிட் பராமரிப்பு மையங்களைத் தொடங்க சென்னை மாநகராட்சியிடம் எவ்வித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

    15:7 (IST)

    ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 465 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்னும் 2 நாட்களில் 6 மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை பல மடங்கு உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.