Latest Tamil News : சென்னை சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா கைது

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 18, 2021, 18:19 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    20:56 (IST)


    ஈரோடு : நாளை காலையில் தடுப்பூசி போட தற்போதே குவிந்த மக்கள் 

    வீரப்பன்சத்திரத்தில் நாளை காலையில் தடுப்பூசி போட தற்போதே மக்கள் குவிந்துள்ளனர்.

    பொதுமக்களே வரிசையாகவும் , கற்கள் வைத்தும் 300 க்கும் மேற்பட்டோர் இருப்பதால் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    18:38 (IST)

    எம்.எஸ்.தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி கதிர் ஆனந்த்-வைரல் புகைப்படம்


    18:19 (IST)


    சென்னை சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை சுஷ்மிதா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    18:4 (IST)

    17:53 (IST)


    டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உடன் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்.

    இந்த புகைப்படத்தில் எம்.எஸ்.தோனியின் மனைவி மற்றும் மகளும் உடன் உள்ளனர்.

    17:14 (IST)

    சென்னை உயர்நீதிமன்றத்தில்  அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கோயில் நிலங்களின் அளவு குறித்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், கோயில்களின் நில விவரங்களை அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவு.

    15:32 (IST)

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக திருச்சி மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து  இருந்து முதலமைச்சரின் பொது  நிவாரண நிதிக்கு தற்போது வரை மொத்தம் ₹ 2.08 கோடி வந்துள்ளது.

    இதில், மாவட்ட ஆட்சியர் பெயரில் மட்டும் ₹ 6.83 லட்சம் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல்.

    13:38 (IST)

    13:38 (IST)

    13:38 (IST)