Latest Tamil News Live : இந்தியாவில் கணிசமாக குறைந்த கொரோனா...பொதுமக்கள் ஆறுதல்

Today News Tamil - Live Updates: கொரோனா வைரஸ், தடுப்பூசி, கிரிக்கெட் அப்டேட் ,தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | April 27, 2021, 18:23 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A YEAR AGO

  AUTO-REFRESH

  18:22 (IST)

  வாட்ஸ்-அப் குழு உறுப்பினர்கள் பரிமாறிக் கொள்ளும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுக்கு, அட்மின்கள் பொறுப்பாக மாட்டார்கள் என மும்பை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. வாட்ஸ்-அப்பில் பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குழுவில் பதிவிடப்படும் தவறான கருத்துக்களை ஒழுங்கபடுத்தவோ, தணிக்கை செய்யவோ அதிகாரம் இல்லாதபோது, வாட்ஸ்-அப் அட்மின்கள் எவ்வாறு அதற்கு பொறுப்பாவார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேசமயம், குழுவில் உள்ள அனைவரும் உள்நோக்கத்துடனோ அல்லது திட்டமிட்டோ, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு அட்மின்களே பொறுப்பாவர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

  18:21 (IST)

  மங்கோலியாவில் வீசிய பிரமாண்டமான புழுதிப்புயலால் ஒரு நகரமே மூடப்பட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. நகரத்திற்கு வெளியில் இருந்து நகர்ந்து வந்த புழுதிப்புயல் பல நூறு மீட்டர் உயரத்திற்குப் பரவி கட்டடங்களை மூடிய காட்சிகள் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

  18:18 (IST)

  முன்மாதிரியாக திருச்சி அரசு பொது மருத்துவமனை!

  கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திருச்சி அரசு மருத்துவமனையில் ராட்சத கொள்கலன் மூலம் ஆக்சிஜன் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 20 டன் கொள்ளளவு கொண்ட இந்த கொள்கலன், கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர ஒரு டன் கொள்ளளவு கொண்ட மற்றொரு கொள்கலனும் உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு முன்மாதிரியாக திகழும் திருச்சி அரசு மருத்துவமனையில், செயற்கை சுவாச கருவிகளுடன் 354 படுக்கைகள் உள்ளன. கொரோனா சிறப்பு பிரிவில் 450 ஆக இருந்த படுக்கை வசதியும், தற்போது 684 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  18:17 (IST)

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உணவக சமையலறையில் வைத்து, ரெமிடெசிவர் மருந்துகளை கள்ளத்தனமாக விற்று வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான தகவலின் பேரில், மோதிலால் நகரில் உள்ள உணவகத்தில் மேற்கொண்ட சோதனையில், 26 மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டன, மேலும், ஒரு ரெமிடெசிவர் மருந்து குப்பியை, 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் அவர்கள் விற்று வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது.

  18:16 (IST)

  நாடு முழுவதும் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கொரோனா பரவலை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.தடுப்பூசிக்கு ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விலையை அறிவித்துள்ளது ஏன்? என மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மருந்து கட்டுப்பாட்டு சட்டப் பிரிவு 6ன் படி, விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், தேசிய பேரிடர் காலத்தில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் எப்போது செயல்படுத்தப் போகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  18:12 (IST)

  7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த வழக்கில் சந்தோஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

  18:4 (IST)

  திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.