Latest Tamil News (April 20): தமிழ்நாடு முதல் உலகம் வரை, கொரோனா வைரஸ், தடுப்பூசி செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | April 20, 2021, 12:38 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 20 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:38 (IST)

    மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர்  இட மாற்றத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு 

    மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளராக அரசு என்பர் உள்ளார்.  இவரது அலுவலகத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியின் போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியியலாளர் அரசு அலுவலத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.

    14:2 (IST)

    ஆம்னி பேருந்து போக்குவரத்து நாளை முதல் நிறுத்தம்.

    ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு 

    ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என அறிவிப்பு. பயணிகள் மன்னித்து கொள்ள வேண்டும். இழப்பை சரி கட்ட முடியாததால் நிறுத்தம் என அறிவிப்பு.

    13:22 (IST)

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தடுப்பூசி அதிக வீண் 

    தடுப்பூசி குப்பி திறக்கப்பட பின்னர் போடபடாததால் 12% கொரோனா தடுப்பூசி வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவருக்கு ஒரு குப்பி என தடுப்பு மருந்து இல்லாமல் 10 பேருக்கு ஒரு குப்பி , 20 பேருக்கு ஒரு குப்பி என்ற நிலையில் உள்ளதால் தடுப்பூசி போட்ட பின்னர் மீதம் உள்ளதை மீண்டும் அடுத்த நாட்களில் பயன்படுத்த முடியாமை காரணமாக தெரிவிக்கபட்டுள்ளது.

    13:11 (IST)


    பிக்பாஸ் புகழ் நடிகர் டேனி தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிப்பது போல சமூக வலைத்தளங்களில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவர் சிறுமியுடன் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருப்பது போல சில ஸ்க்ரீன்ஷாட்கள் வெளியானது.

    12:34 (IST)

    போக்குவரத்துக்கு ஊழியர்கள் அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி கட்டாயம் என தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது .

    12:21 (IST)

    கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல், மறு உத்தரவு வரும் வரை, திருச்சி முக்கொம்பு மேலணை சுற்றுலாத் தலம் திறக்கப்படாது என்று பொதுப்பணித்துறை அறிவிப்பு. ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா & மாநகர் பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மூடல்.

    12:13 (IST)

    இரவு பேருந்து இல்லை என்பதற்காக சென்னை செல்ல முன்பதிவு இல்லாத பயணிகள் மதுரை ரயில் நிலையம் வர வேண்டாம்.ரயில்கள் வழக்கமான நேரத்தில் இரவிலும் இயங்கும். எனவே, இரவு 10 மணிக்கு மேல்  சென்னை செல்ல பேருந்து இல்லை என பயணிகள் மதுரை ரெயில் நிலையம் வர வேண்டாம். முன் பதிவு செய்யாத பயணிகள் மதுரை ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் -  ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு 

    11:54 (IST)

    இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    11:26 (IST)

    வேலூர் மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட புகாரின் விவகாரத்தில் மருத்துவகல்வி இயக்குனர் நாராயண பாபு ,வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபின் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவு