
Highlights
கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம்
கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆலோசனை
ஜூலை 15-ம் தேதி முதல் அரசுமற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்குபாடப்புத்தகம் வழங்கும் பணி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும் ஜூலை 15-ம் தேதி முதல் மாணவர்களின் லேப்டாப்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் பணியும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 31-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூலை 15-ம் தேதி வரை பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 31 வரை தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கபட்டுள்ளது.
தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் கேட்ட நிலையில் 7 நாட்கள் மட்டுமே வழங்கி அனுமதி அளித்துள்ளது. ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 21-ம் தேதி வரை காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் 2-வது குற்றவாளியாக கருதப்படுபவர்தான் இந்த ஸ்வப்னா. ஒருவாரமாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் இருந்தபோது பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.