Latest Tamil News (April 21): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்

Today News Tamil - Live Updates: தமிழ்நாடு , புதுச்சேரி தேர்தல் கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | April 21, 2021, 09:14 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 21 DAYS AGO

    AUTO-REFRESH

    13:6 (IST)

    மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் 

    12:51 (IST)

    அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.400க்கு வழங்கப்படும் 

    தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கு வழங்கப்படும் - சீரம் நிறுவனம் 

    11:40 (IST)

    ஆறுகள் மற்றும் நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தேவைப்படும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

    11:36 (IST)

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது, ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    11:36 (IST)

    கொரோனா தடுப்பூசி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

    11:30 (IST)

    மண்டேலா திரைப்படத்தை மறுதணிக்கை செய்யக்கோரிய  வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்.

    11:28 (IST)


    தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாகு ஆலோசனை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் சத்ய பிரதா சாகு ஈடுபட்டு வருகிறார். 

    11:27 (IST)

    கொரோனா பரவலால் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள

    கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 22-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 14-ம் நாளிலும், பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    10:52 (IST)

    புதுச்சேரி  கொரோனா அப்டேட் 

     கடந்த 24 மணி நேரத்தில் 619 பேர் பாதிப்பு. ஐந்து பேர் இறப்பு.
     
    மொத்தமாக 49 ஆயிரத்து 593 பேர் பாதிப்பு. 722 பேர் இறப்பு


    10:51 (IST)

    கொரோனா தடுப்பூசி இல்லை

    கொரோனா தடுப்பூசி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததால்  ஆத்திரமடைந்த பொது மக்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்