அதிக ஃபாலோவர்ஸ் இருந்தும் என்ன பலன்? பாஜக ஐடி விங் டீமிடம் வருத்தப்பட்ட எல்.முருகன்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

திமுக பல கோடிகளை செலவு செய்வதாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாஜகவின் சமூக ஊடகப் பிரிவினர் செயலாற்றி வருவதாகவும் எல்.முருகன் பேசினார்.

  • Share this:
சமூக வலைதளங்களில் பாஜக தெரிவிக்கும் கருத்துக்களை பாஜகவின் ஐடி பிரிவு சார்ந்தவர்கள் பகிர்வது இல்லை. இதனால் 10 லட்சம் மக்கள் நம்மை பின் தொடர்ந்தாலும் நம் கருத்து மக்களிடம் ஐடி விங் கொண்டு சேர்ப்பதில்லை.நாம் பாஜகவின் முகநூல் பக்கத்தில் என்ன  பதிவிட்டாலும் முதலில் போலி கணக்கில் உள்ள நபர்கள் தான் விமர்சனம் செய்கிறார்கள் நம்முடைய கட்சியை சார்ந்த நபர்கள் அதை பகிர்வது கூட இல்லை என பாஜக தலைவர் முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில மாநாடு சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது.
பாஜக சமூக ஊடகப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மால்வியா, மாநில பாஜக தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன், மாநில சமூக ஊடகப் பிரிவின் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய சமூக ஊடகப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மால்வியா, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கட்சி ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்ப்பு உள்ளதாகவும், சித்தாந்த ரீதியில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த உழைக்க வேண்டும் என்றும் சமூக ஊடகப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதை தொடர்ந்து பேசிய மாநில பாஜக தலைவர் எல்.முருகன், வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பங்காற்றப் போவது பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு தான் என்றும், தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால் அதிக கவனத்துடன் உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சமூக ஊடகப் பிரிவுக்காக, திமுக பல கோடிகளை செலவு செய்வதாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாஜகவின் சமூக ஊடகப் பிரிவினர் செயலாற்றி வருவதாகவும் எல்.முருகன் பேசினார்.

சமூக வலைதளங்களில் அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்திருப்பது பாஜக தான் என்றாலும், கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தின் செயல்பாடு சரியாக இல்லை என்று வருத்தம் தெரிவித்த எல்.முருகன்,போலி கணக்குகளில் இருந்து நெகட்டிவ் போடும் நபர்களுக்கு கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் உடனுக்குடன் பதிலடி தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Published by:Vijay R
First published: