ஐபிஎல் 2016ல் அதிரடி மன்னன், அசகாய சூரன் என்றெல்லாம் பேசப்பட்ட ‘தல’ தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் அமைத்த மாஸ்டர் ஸ்ட்ரோக் களவியூகத்தை ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ட்விட்டரில் எடுத்துக் காட்டியுள்ளது. முன்னாள் கொல்கத்தா கேப்டன் கம்பீர் பல சந்தர்ப்பங்களில் தோனியின் மட்டையைச் சுற்றி களவியூகம் அமைத்துள்ளார்.
இன்று ஆஷஸ் தொடர் 4வது டெஸ்ட் 5ம் நாள் ஆட்டத்தின் 4-வது இன்னிங்சில் 102 ஓவர்களுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளீன் ஸ்வீப் வெற்றியை சிட்னியில் இன்று முறியடித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 101 முறை நாட்-அவுட்டாக இருந்துள்ளார். அவர் இன்று இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் வீசிய ஓவரில் பேட் செய்தார் அந்த ஓவரில் ஆட்டமிழக்காமல் பிரமாதமாக தடுத்தாடி ஆட்டத்தை டிரா செய்தார்.
இந்த ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் டெய்ல் எண்டர்கள் ஆட ஆஸ்திரேலியா பேட்டரைச்சுற்றி ஒரு தாக்குதல் களவியூகத்தை அமைத்தது மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பீல்டரையும் பேட்டரைச் சுற்றி நெருக்கமாகக் கொண்டு வந்தது. கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு ஃபீல்டரை சில்லி பாயிண்ட், ஃபார்வர்ட் ஷார்ட் லெக், ஸ்லிப்ஸ் மற்றும் லெக் ஸ்லிப்பில் நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி சிலமணித்துளிகள் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.
That moment when a classic move in Test cricket actually reminds you of a T20 master stroke! #Ashes #KKR #AmiKKR #AUSvENG pic.twitter.com/D3XbMu83mf
— KolkataKnightRiders (@KKRiders) January 9, 2022
ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கமின்ஸின் இந்த களவியூகம் ஐபிஎல் 2016 தொடரில் கொல்கத்தா அணி அதிரடி வீரர் தல தோனிக்கு எதிராக கௌதம் கம்பீர் செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்கை நினைவுபடுத்துவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது. தோனி அந்தக் களவியூகத்தை முறியடிக்கவில்லை, 22 பந்துகளில் 8 ரன்களையே எடுத்தார். கொல்கத்தா போட்டியை வென்றது. பெரிய ஹிட்டர் என்று நம்பப்படும் தோனியை சுற்றி பீல்டர்களை நிறுத்தி கம்பீர் தோனி ஒரு ஹிட்டர் என்ற பார்வையை தகர்த்தார்.
தோனியைக் கட்டிப்போடும் அட்டாக்கிங் பீல்டிங் செட் அப்-ஐ கம்பீர் அமைத்தது இது முதல் முறை அல்ல. ஐபிஎல் 2015 இல், கம்பீர் தோனியைச் சுற்றி 4 வீரர்களை நிறுத்தினார். அதே நேரத்தில் விஜய் ஹசாரே கோப்பையின்போதும், முன்னாள் டெல்லி கேப்டன் கம்பீர் ஜார்கண்ட் கேப்டன் தோனிக்கு 13 ரன்களுக்கு 4 விக்கெட் போயிருந்த போது அமைத்ததும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.