• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • எனது நாட்கள் எண்ணப்படுகின்றன - கிரண்பேடி திறந்த மடல்

எனது நாட்கள் எண்ணப்படுகின்றன - கிரண்பேடி திறந்த மடல்

கிரண்பேடி

கிரண்பேடி

துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி மக்களுக்கு திறந்த மடல் எழுதியுள்ள கிரண்பேடி அதில், நான்கு ஆண்டுகளை துணைநிலை ஆளுநராக பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தது. பல சவால்களை சந்தித்தது  கடந்த நான்கு ஆண்டுகளின் வரலாறே சாட்சி.

இக்காலத்தில் ராஜ் நிவாஸ் மக்கள் நிவாஸ் ஆனது.  வார இறுதி நாட்கள் ஆய்வுகளை மறந்து விடக்கூடாது. கொரோனா இதையெல்லாம் மாற்றியுள்ளது என கூறியுள்ளார். கலால்துறையில் கணினி மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது, தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது.

கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத் தொகை ஆகியவற்றில் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை என நிதி பெருக்கத்திற்கு ஆலோசனை கூறியுள்ள கிரண்பேடி, சுற்றுலா வருவாய் இழப்பு உள்ளதால் தற்போதைய கையிலுள்ள சொத்துகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.  தற்போதைய  சூழலில் நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட  அதிகாரியால் நேர்மையாக செயல்படுத்தும் திறன் இவ்விஷயத்தில் தேவை.

புதுச்சேரி மக்கள் தங்கள் நல்வாழ்வு, சமூகம் ஆகியவற்றில் தங்கள் சொந்த பொறுப்பை உணர்தல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரிக்கு சேவையாற்ற ஐந்தாம் ஆண்டில் நுழைகிறேன். என்னை பொருத்தவரை கவுன்ட்டவுண் தொடங்கிவிட்டது என்றும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

Also see...

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: