• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • கேரளாவின் புகழ்பெற்ற படகு பந்தயத்தை நடத்திய கனடா.... வைரலாகும் வீடியோ!

கேரளாவின் புகழ்பெற்ற படகு பந்தயத்தை நடத்திய கனடா.... வைரலாகும் வீடியோ!

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ப்ரொபஸர்ஸ் ஏரியில் நடந்த பாரம்பரிய படகுப் போட்டியில் 21 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

  • Share this:
இந்தியாவிலேயே படகு போட்டியை பாரம்பரியமாக நடத்தும் மாநிலம் என்றால் அது கேரளா தான். இந்த போட்டி மிகப்பெரிய அளவில் வெகுவிமர்சையாக நடத்தப்படும். வள்ளங்களி என்று அழைக்கப்படும் கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய படகு பந்தயம் தற்போது உலகளாவிய போட்டியாகவே மாறிவிட்டது. சமீபத்தில் கனடாவில் இந்த படகு போட்டி மீண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ப்ரொபஸர்ஸ் ஏரியில் நடந்த பாரம்பரிய படகுப் போட்டியில் 21 அணிகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு படகிலும் 11 உறுப்பினர்கள் என இரண்டு பெண்கள் அணிகளும், 19 ஆண்கள் அணிகளும் இந்த பந்தயத்தில் போட்டியிட்டனர். இந்திய பாரம்பரிய நிகழ்ச்சி பிராம்ப்டன் மலையாளி சமாஜத்தால் இந்திய தூதரகம் இருக்கும் டொராண்டோவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி "ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவிற்காக" மலையாள சமூக உறுப்பினர்கள் இந்தநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வீடியோவை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கேரளா படகுப் போட்டி உலகளாவியது, கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள ப்ரொபஸர் ஏரியில் இந்திய டொராண்டோ மற்றும் பிராம்ப்டன் மலையாளி சமாஜத்தால் பாரம்பரிய கேரள படகுப் போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. இது "250 மீட்டர் தீவிர போட்டி" என்று அந்த வீடியோவில் கேப்ஷன் செய்துள்ளார்.



இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும், லைக்ஸ்களையும் , ஷேர்ஸ்களையும் பெற்றுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் மலையாளிகள் தாங்கள் வசிக்கும் நாட்டில் கூட பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருப்பதை இந்த வீடியோவில் காணலாம். மேலும் இந்த வீடியோவை வெளியிட்டு மலையாள சமூகத்திற்கு மத்திய அமைச்சர் அளித்த ஆதரவுக்காக பலர் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Also Read : திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

பிராம்ப்டன் படகுப் போட்டி வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் பிராம்ப்டன் மலையாளி சம்ஜத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் பழமையான மரபுகளில் ஒன்றாக இருப்பதால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை காலத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதனை கேரள மொழியில் அரண்முலா படகுப் போட்டி அல்லது அரண்முலா உத்திரட்டாதி வள்ளங்களி என்று அழைப்பர். மேலும் இது ஒரு பெரிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. பிராம்ப்டன் மலையாளி சம்ஜம் என்பது அரசியல் அல்லாத, மதச்சார்பற்ற மற்றும் கலாச்சார அமைப்பு என்று வரையறுக்கப்படுகிறது. இது கேரளாவின் கலாச்சார மொழி மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: