இனவாத வெறுப்புக்கு நடன வீடியோக்கள் மூலம் பதிலடி கொடுத்து வரும் கேரள மாணவர்கள்!

இனவாத வெறுப்புக்கு நடன வீடியோக்கள் மூலம் பதிலடி கொடுத்து வரும் கேரள மாணவர்கள்!

கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் கே ரசாக் மற்றும் மாணவி ஜானகி ஓமகுமார் இருவரும்உற்சாகத்துடன் அற்புதமாக நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். இவர்களின் விறுவிறுப்பான ரஸ்புடின் நடனத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் இந்த நடன வீடியோ மிகவும் வைரலாகியது.

கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் கே ரசாக் மற்றும் மாணவி ஜானகி ஓமகுமார் இருவரும்உற்சாகத்துடன் அற்புதமாக நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். இவர்களின் விறுவிறுப்பான ரஸ்புடின் நடனத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் இந்த நடன வீடியோ மிகவும் வைரலாகியது.

  • Share this:
இரு கேரள மருத்துவ மாணவர்கள் பிரபல பாப் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலானது தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பரவிய வகுப்புவாத ட்ரோலிங் மற்றும் பதிவுகளுக்கு அதே போல நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு பல மருத்துவ மாணவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜெர்மன் ரெக்கார்ட் புரோடியூசர் பிராங்க் ஃபாரியனால் உருவாக்கப்பட்ட யூரோ-கரீபியன் போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடல் ’ரஸ்புடின்’. கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் கே ரசாக் மற்றும் மாணவி ஜானகி ஓமகுமார் இருவரும்உற்சாகத்துடன் அற்புதமாக நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். இவர்களின் விறுவிறுப்பான ரஸ்புடின் நடனத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் இந்த நடன வீடியோ மிகவும் வைரலாகியது.இந்த நடன வீடியோ இணையத்தில் பாராட்டுகளை ஒருபுறம் குவித்தாலும், மறுபுறம் இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்தது. குறிப்பாக வழக்கறிஞர் ஒருவர் மாணவர் ரசாக்கின் மதத்தை தொடர்புபடுத்தி "லவ் ஜிகாத்"இதற்கு பின்னணி காரணமாக இருக்கலாம். மாணவி ஜானகி வீட்டார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போஸ்ட் பதிவிட்டார். மேலும் ஒரு சிலர் இவர்களின் நடனத்திற்கு எதிராக மதத்தை முன் வைத்து கருத்துக்கள் மற்றும் போஸ்ட்களை வகுப்புவாதத்தை முன்னெடுப்போர் பதிவிட்டனர்.

லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டுகள் மற்றும் நடனமாடிய இருவருக்கும் எதிரான வகுப்புவாத கருத்துக்கள் வைரலாகி வந்ததையடுத்து, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றொரு வீடியோவுடன் பதிலளித்துள்ளனர். அதுவும் கீழ்காணும் வாசகத்துடன்: "வெறுப்பது உங்கள் திட்டம் எனில், அதை எதிர்ப்பது எங்கள் முடிவு" (If the intention is hate, then the decision is to resist) என்று என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தனது நடன வீடியோ குறித்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்த ரசாக், தற்போதைய புதிய தலைமுறையினர் நாங்கள். இதுபோன்று எழும் வகுப்புவாத கருத்துகள் குறித்து நாங்கள் கவலைப்பட்டதில்லை, கவலைபடவும் மாட்டோம். அண்மையில் நடன இயக்குநர் வனேசா சகோ ரஸ்புடின் பாணியில் நடனமாடி இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார். அதை பார்த்து இம்ப்ரஸ் ஆகி தான் நானும், ஜானகியும் தீவிர பயிற்சி செய்து இந்த நடனத்தை ஆடினோம். அடுத்ததாக விரைவில் வேறொரு பாடலுக்கும் நடனமாடி வீடியோ வெளியிடவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் ரசாக் தனது இன்ஸ்டாவில் ஜானகியுடன் சேர்ந்து "எங்களை ஆதரித்தவர்களுக்கு நன்றி"என பதிவிட்டுள்ளார். நடனத்தை நடனமாக பார்க்காமல் மதத்துடன் தொடர்புப்படுத்திப் கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் #resisthate என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி, அதே 'ரஸ்புடின்' நடனமாடி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Ram Sankar
First published: