தாமரை மலரக்கூடாது... இலையும்  வந்து விடக்கூடாது - கோவையில் கரு.பழனியப்பன் பேச்சு

தாமரை மலரக்கூடாது... இலையும்  வந்து விடக்கூடாது - கோவையில் கரு.பழனியப்பன் பேச்சு

கரு.பழனியப்பன்

தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு மாநில முதல்வர் உ.பியில் இருத்து வரும் போது  கடை எல்லாம்  அடைக்க சொல்லிட்டு யாருகிட்ட ஓட்டு கேட்க போறாங்க.

  • Share this:
தமிழகத்தில் அ.தி.மு.க ஜெயித்தால் அது பா.ஜ.க ஜெயித்ததாக பொருள் எனவும், தாமரை மலராமல் இருப்பது மட்டும் அல்ல, இலையும்  வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டுமென திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கரும்புகடை பகுதியில்  தி.மு.க வேட்பாளர் நா.கார்த்திக்கு ஆதரவாக இயக்குநர் கரு.பழனியப்பன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர்  பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முதலில் பேசிய திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன்,இந்த தேர்தல் என்பது இரு கட்சிகளுக்கு இடையே நடப்பது அல்ல தீமைக்கும் நன்மைக்கும் இடையிலான போர். பா.ஜ.க எப்படி கேடு என்றால், அ.தி.மு.க-வை இல்லாமல் செய்து  அத்தனை பேரையும் அடிமைகளாக்கி  காலில் விழவைத்து இருக்கின்றது. தமிழகத்தில் அத்தனை இடங்களிலும் . தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.என்றார்

சீட் முக்கியமில்லை என  அறத்தின் பக்கம் நின்றவர் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. ஆர்.எஸ்.புரத்தை ஆர்.எஸ்.எஸ் புரமாக்கி கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.கவினர். நாம் பார்க்க வேண்டிய வேலையை யோகி ஆதித்யநாத் வந்து பார்த்துட்டு போயிருக்கின்றார். அவர் வந்ததனால் நிறைய பேர் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட போறாங்க. தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு மாநில முதல்வர் உ.பியில் இருத்து வரும் போது  கடை எல்லாம்  அடைக்க சொல்லிட்டு யாருகிட்ட ஓட்டு கேட்க போறாங்க. அ.தி.மு.க ஜெயித்தால் அது பா.ஐ.க ஜெயித்ததாக பொருள், தாமரை மலராமல் இருப்பது மட்டும் அல்ல, இலையும்  வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்’ என தெரிவித்தார்.

கரு.பழனியப்பன்


இதனைத் தொடர்ந்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி , "இந்த தேர்தல் களம் என்பது அரசுக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல்களம். கடந்த தேர்தல்கள் வளர்ச்சியின் அடிப்படையில் நடைபெற்று இருக்கும் நிலையில் இந்தத் தேர்தல் தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு பொதுவான உணர்வு அடிப்படையில் நடக்கிறது. மதங்களுடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர் இதைத் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கின்றது.

உத்தரப்பிரதேச முதல்வர் கோவைக்கு வந்த பொழுது தங்களது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் தைரியம் அவர்களுக்கு  இல்லை , மாறாக கடைகள் மீது கல்வீசி பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழர்கள், மலையாளிகள், வங்காளிகள்  முற்போற்காக சிந்திப்பவர்கள், இதனால்தான் தமிழகத்தில் தங்கள் தலைவர் மோடி படத்தை போட்டால் வாக்கு கிடைக்காது என்பதற்காக மோடி படத்தை அவர்கள் கட்சியினரே தவிர்க்கின்றனர். இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி, இது பெரியார் பக்குவபடுத்திய பூமி. அரசை பாதுகாக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையாக இந்த தேர்தலை  கருதுகின்றோம்’ என பேசியவர் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
Published by:Ramprasath H
First published: