எத்தனை வலிமிகுந்த வரிகள்.. செவிசாய்க்குமா அரசுகள்? - இயக்குநர் கரு பழனியப்பன்

எத்தனை வலிமிகுந்த வரிகள்.. செவிசாய்க்குமா அரசுகள்? - இயக்குநர் கரு பழனியப்பன்

கரு.பழனியப்பன்

Iam sorry, i am tired என்பது அவரின் வேதனைக்குரல் மட்டுமல்ல. தமிழக மாணவர்களின் வேதனைக்குரல். செவிசாய்க்குமா கொலைக்கார அரசுகள்” என பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    I am sorry, I am tired என்பது மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் வேதனைக் குரல் மட்டுமல்ல. தமிழக மாணவர்களின் வேதனைக்குரல் என தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநரும், பேச்சாளருமான கரு. பழனியப்பன்.

    மதுரை பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் துர்கா நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மீண்டும் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்துவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்தார்.



    நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சத்தில் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் தற்கொலைக் கடிதத்தில் உள்ள வரிகளைக் குறிப்பிட்டிருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், “எத்தனை வலிமிகுந்த வரிகள்.. Iam sorry, i am tired என்பது அவரின் வேதனைக்குரல் மட்டுமல்ல. தமிழக மாணவர்களின் வேதனைக்குரல். செவிசாய்க்குமா கொலைக்கார அரசுகள்” என பதிவிட்டுள்ளார்.

    மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் கடிதம்


    நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். ”தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Gunavathy
    First published: