ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

’19-ம் தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ - கார்த்திக் சிதம்பரம் எம்.பி பகிர்ந்த சஸ்பென்ஸ்!

’19-ம் தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ - கார்த்திக் சிதம்பரம் எம்.பி பகிர்ந்த சஸ்பென்ஸ்!

கார்த்திக் சிதம்பரம் எம்.பி

கார்த்திக் சிதம்பரம் எம்.பி

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவாக வாக்களித்தாக கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூக்கு கிடைத்த ஆதரவை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றும் 19-ம்தேதி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி கூறினார்.

  அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த பின் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

  ஜனநாயக முறையில், அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும், சசிதரூர் என்னை பொறுத்தவரை திறமையான பேச்சாளர், எழுத்தாற்றல் மிக்கவர். கட்சிக்கு வலிமை சேர்க்க கூடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் ஆதரவை பெற்றவர். நடுத்தர மக்களை அரவணைத்து செல்பவர் சசிதரூர். காங்கிரஸ் கட்சியினருக்கு அப்பாற்பட்டவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் சசிதரூர் தலைவராக வரவேண்டும்.

  என்னுடைய முழு ஆதரவு அவருக்குதான். அவர் 23 புத்தங்களை எழுதியுள்ளார். நன்றாக படித்து முன்னேறியவர். சசிதரூரின் ஆதரவை குறைத்து மதிப்பீடுகிறார்கள். நாளை மறுநாள் ( 19-ம் தேதி) வாக்கு எண்ணிக்கையின்போது, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

  புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மானசீக தலைவராக இருப்பார்கள். நேரு குடும்பத்தின் வழிகாட்டுதலின்படிதான் செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் மனதில் ராகுல் காந்திதான் என்றும் மானசீக தலைவராக இருப்பார்.

  இதையும் படிங்க : காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - இன்று தேர்தல் - கர்நாடகாவில் வாக்களிக்கிறார் ராகுல்!

  பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி  வலுவாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. பாரத் ஜோடா யாத்திரையின் பலனை வாக்குகளாக மாற்றுவதும்,  உதய்பூரில் தீர்மானத்தை செயல்படுத்துவதும், புதிய காங்கிரஸ் தலைவருக்கு சவாலாக இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Published by:Lakshmanan G
  First published: