தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்கிறேன்; உண்மை ஒருநாள் வெளிவரும்: பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர்

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ராஜினாமா

“என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மையும் இல்லை. தெளிவான விசாரணை தேவை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது"

 • Share this:
  அரசு வேலை வாங்கித் தருவதாக இளம் பெண் ஒருவரை ஆசை காட்டி அவரை பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்திய புகாரில் சிக்கிய கர்நாடகா எடியூரப்பா தலைமை பாஜக அரசின் நீராதாரத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

  இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளம் பெண்ணுடன் பல முறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கர்நாடகா பாஜக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.

  இது தொடர்பான வீடியோ, சிடிக்கள் அடங்கிய ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடகாவில் குமாரசாமி தலைமை காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் எடியூரப்பா தலைமை பாஜக ஆட்சி அமைய முக்கியக் காரணம் ரமேஷ் ஜார் சிஹோளிதான் என்று கூறப்படுகிறது.

  இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவருக்கு ஆசை காட்டி பலமுறை அவருடன் உடலுறவு கொண்டதாக ரமேஷ் ஜார் சிஹோளி உறவு வைத்துக் கொண்டதாக கன்னட டிவி சேனல்கள் நேற்று பரபரப்பு செய்தி வெளியிட்டது.

  இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

  அவர் தன் ராஜினாமா கடிதத்தில், “என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மையும் இல்லை. தெளிவான விசாரணை தேவை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

  எனவே தார்மீக அடிப்படையில் நான் ராஜினாமா செய்கிறேன், இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  இவரது ராஜினாமாவை ஏற்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா இதனை ஏற்புக்காக கவர்னருக்கு அனுப்பியுள்ளார்.

  இது தொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்கத் தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ அடங்கிய சிடி ஆதாரத்துடன் கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவர் தன்னிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வந்து நீதி பெற்று தர வேண்டும் என்று கோரியதாகத் தெரிவித்தார்.

  கர்நாடகா உள்துறை அமைச்சர் பி.பொம்மை கூறும்போது, “சட்டப்படி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கட்டி முடிவெடுக்கும்” என்றார்.
  Published by:Muthukumar
  First published: