கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கார் மீது லாரி மோதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருவட்டார் பகுதியைச் சேர்ந்த சகாயதாஸ், தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். சாமியார்மடம் அருகே சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் படுகாயமடைந்தனர்.
அதில், இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்