ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

'மகத்தான மனிதர்கள்... 'கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. 'இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!

'மகத்தான மனிதர்கள்... 'கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. 'இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!

இந்தியன் 2 கமல்

இந்தியன் 2 கமல்

சிக்கல்கள் இல்லாமல் சரியாக திட்டமிட்டு இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் சரியாக திட்டமிட்டு நடத்திவருகிறார் இயக்குநர் ஷங்கர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடையில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் இயக்கினார்.

சிக்கல்கள் இல்லாமல் சரியாக திட்டமிட்டு இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் சரியாக திட்டமிட்டு நடத்திவருகிறார் இயக்குநர் ஷங்கர். இதனையடுத்து மீண்டும் சேனாபதியாக அவதாரமெடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் படம்

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு எடுக்கப்பட்ட படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள் , மகத்தான நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: DMK Karunanidhi, Indian 2, Kamal Haasan