ஹோம் /நியூஸ் /Live Updates /

கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்சானி சடலமாக மீட்பு... கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்..

கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்சானி சடலமாக மீட்பு... கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்..

கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்சானி சடலமாக மீட்பு... கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்..

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் காணாமல் போன அணுமின்நிலைய விஞ்சானி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திராவைச் சேர்ந்த 26 வயதான சத்யசாய் ராம், கடந்த ஒரு வருடமாக அணுமின்நிலையத்தில் பயிற்சி விஞ்ஞானியாக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள சீனியர் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றவர் திரும்பி வரவில்லை. தேடிப்பார்த்த நண்பர்கள் அவர் கிடைக்காததால் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். கல்பாக்கம் வந்த அவரின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை.. முக்கிய குற்றவாளி கைது..

  ' isDesktop="true" id="487709" youtubeid="6XkCF69pRKI" category="live-updates">

  அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் வாயாலூர் பாலாறு அருகே அவரது சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. பக்கத்திலேயே எரிந்த நிலையில் சத்யசாய் ராம் சடலமாக கிடந்தார். உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், சத்யசாய் ராம் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Death, Nuclear Power plant, Scientist