முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் மறைவு! மு.க.ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்

முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் மறைவு! மு.க.ஸ்டாலின், வைரமுத்து இரங்கல்
கோகுல கிருஷ்ணன்
  • Share this:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைரமுத்து ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில், அரசு வழக்கறிஞராக திறம்பட பணியாற்றிய அவர், அதற்கு காரணமான நடிகர் எம்.ஆர்.ராதாவிற்கு தண்டனை பெற்று தந்தவர் ஆவார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 1985-ம் ஆண்டு முதல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அம்மாநிலத்தின் ஆளுநராகவும் இருமுறை பதவி வகித்தவர் ஆவார். அவரது மறைவிற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாளை காலை அடையாறில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.


கோகுலகிருஷ்ணன் மறைவு குறித்த வைரமுத்து ட்விட்டர் பதிவில், ‘நீதிக் காவலர் - கலைக் காதலர் - தமிழ் ஆர்வலர் - இசைப் புரவலர் - நீதியரசர் கோகுலகிருஷ்ணன் மறைந்துவிட்டார்; நீதிப் புத்தகத்தின் நெடும்பக்கம் கிழிந்துவிட்டது. என் அறிவுத் துணைகளுள் ஒன்று அழிந்துபட்டது. கலங்கி நிற்கிறேன். இரண்டு கண்களையும் துடைத்துக்கொண்டு இரங்கல் தெரிவிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்