பழனி கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் 90 கோடி ரூபாய் வரிஏய்ப்பு!

பழனி கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் 90 கோடி ரூபாய் வரிஏய்ப்பு!
வருமான வரித்துறையினர் சோதனை
  • Share this:
பழனி கந்தவிலாஸ், சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.90 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். சுவை மிகுந்த இந்த பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கிரிவீதி பகுதியில் உள்ள கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளுக்கு 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறையை சேர்ந்த 40 அதிகாரிகள், இரண்டு கடைகளுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில் ரூ.90 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 22 கோடி மதிப்பிலான தங்கம், 3 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
First published: August 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்