Home /News /live-updates /

அஜித் 61 படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

அஜித் 61 படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

அஜித் குமார்

அஜித் குமார்

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகர் அஜித் நடிக்கும் 61-வது படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் மூன்றாவது படத்தில் நடிகர் அஜித் நடித்த வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஐத்தராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.

அதில் படத்திற்கு தேவையான 80 சதவீத காட்சிகளை படமாக்கி உள்ளனர். இன்னும் 20 சதவீத காட்சிகள் மட்டுமே மீதமுள்ளன. அதை அடுத்த கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். குறிப்பாக இரண்டு சண்டைக் காட்சிகள் அதில் படமாக்க உள்ளன என கூறப்படுகிறது.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த மூன்றாவது திரைப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தொடங்கப்பட்ட போது தீபாவளிக்கு கொண்டுவர திட்டமிட்டனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தீபாவளி பண்டிகை வெளியீட்டில் இருந்து அஜித்-61 படம் பின்வாங்கியது. அதன் பிறகு டிசம்பரில் வெளியிடவும் படக்குழுவினர் ஆலோசித்தனர்.

Also read... கைதி கார்த்தி போன்ற தோற்றத்தில் நடிகர் விஷால் - மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆனால் அஜித் ரசிகர்கள் பண்டிகை நாட்களில் படம் வெளியாக வேண்டும் என விரும்புகின்றனர். அதேபோல படக்குழுவினரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தற்போது திட்டமிட்டு வருகிறார்கள் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். அதேபோல் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Entertainment

அடுத்த செய்தி