• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • IPL 2021 Points Table: ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யாருக்கு? ராஜஸ்தான் 5ம் இடம்

IPL 2021 Points Table: ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் யாருக்கு? ராஜஸ்தான் 5ம் இடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் 5ம் இடம்

ராஜஸ்தான் ராயல்ஸ் 5ம் இடம்

பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ராஜஸ்தான் வெற்றியில் முடிந்ததையடுத்து பாயிண்ட்ஸ் டேபிள் எப்படி உள்ளது? கடைசி ஓவரில் 4 ரன்களை எடுக்க விடாமல் கார்த்திக் தியாகி அசத்த பஞ்சாப் கிங்ஸ் 2 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இதனையடுத்து 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் மும்பையை மிரட்டுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

  • Share this:
    கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் என்பது எளிதான வெற்றிதான் ஆனால் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் கார்த்தி தியாகி செய்ய சாத்தியமில்லாததைச் செய்து காட்டினார்கள்.. அதே போல் சக்காரியா தடுத்த அந்த பவுண்டரி, ஒரு ரன் தான் வந்தது. 3 முக்கியமான ரன்களைத் தடுத்தது வெற்றியில் முக்கிய பங்களிப்பாகும். கடைசி ஓவரில் 4 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது கார்த்திக் தியாகி 1 ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்க்க பஞ்சாப் விதிமுடிந்தது. ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி இனி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.



    ஐபிஎல் 2021 அதிக ரன்களுக்கான ஆரஞ்சு கேப்:

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இப்போதைக்கு அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ளனர். இதுவரை 8 ஆட்டங்களில் இருவரும் 380 ரன்கள் எடுத்துள்ளனர். இன்று ஷிகர் தவான் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கும்போது தவான் ஆரஞ்சு தொப்புக்கு ஒரே உரிமையாளர் ஆகி விடுவார். 3வது இடத்தில் மயங்க் அகர்வால் 327 ரன்களுடனும் டுபிளெசிஸ் 320 ரன்களுடன் 4ம் இடத்திலும் உள்ளனர்.

    ஐபிஎல் 2021 பர்ப்பிள் தொப்பி:

    ஐபிஎல் 2021 அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் தொப்பி ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் இருவரிடமும் உள்ளது. கிறிஸ் மோரிஸ் 14 விக்கெட்டுகளுடன் போட்டியில் உள்ளார். அர்ஷ்தீப் சிங் நேற்று 5 விக்கெட்டுகளைச் சாய்த்து 12 விக்கெட்டுகளுடன் போட்டியில் இறங்கியுள்ளார். ராகுல்ல் சாகர் 11 விக்கெட்டுகளுடன் சவால் அளித்து வருகிறார்.

    Also Read: PBKS vs RR IPL 2021: 2 ஓவர் 8 ரன்கள், 8 விக்கெட் கையில், தோற்க முடியுமா?- அதுதான் பஞ்சாப்- பிளே ஆஃப் கதவு அடைப்பு


    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: