• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • பும்ரா, போல்ட்டை விளாசித் தள்ளிய மேட்ச் வின்னிங் ருதுராஜ் கெய்க்வாட்

பும்ரா, போல்ட்டை விளாசித் தள்ளிய மேட்ச் வின்னிங் ருதுராஜ் கெய்க்வாட்

ரூத்ராஜ் கெய்க்வாட்

ரூத்ராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் 2021, 30வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தன் அருமையான பார்மைத் தொடர்ந்தார். 88 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்து மேட்ச் வின்னரானார் ருதுராஜ்.

  • Share this:
    சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்சில் விக்கெட்டுகள் ஒருமுனையில் மளமளவென சரிந்து 25/4 என்று ஆன போது ஒரு முனையை தாங்கிப் பிடித்தார் ருதுராஜ், பிறகு கடைசியில் பும்ராவையும் விளாசினார், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை இவரும் பிராவோவும் ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசினர், இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையானது. பும்ரா வீசிய 20வது ஓவரில் கடைசி பந்தை பிளிக்-ஸ்வீப் போல் ஆடி சிக்சருக்குத் தூக்கி அதிர்ச்சியளித்தார். பும்ரா உண்மையில் ஆச்சரியமாகப் பார்த்தார், இங்கிலாந்தில் பெரிய அளவில் பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பும்ராவை ருதுராஜ் கெய்க்வாட் சிக்சர் அடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

    16வது ஓவர் தொடக்கத்தில் 39 பந்துகளில் 46 என்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட், பொலார்ட் வீசிய ஆஃப் ஸ்டம்ப் வைடு பந்தை லாங் ஆனில் புல் ஷாட் ஆடினார் பந்து பவுண்டரியைக் கடக்க 6வது ஐபிஎல் அரைசதம் கண்டார். பிறகு அதே பொலார்டு ஓவரில் நேராக இன்னொரு பவுண்டரி விளாசினார். 17வது ஓவரில் பும்ரா மீண்டும் வீச வரும்போது 2வது பந்து ஸ்லோயர் ஒன்னாக அமைய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை ருதுராஜ் திகைப்பூட்டும் விதத்தில் லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார், பும்ரா முகத்தில் லேசான கோபம் கூட தெரிந்தது.

    19வது ஓவரை போல்ட் வீச ஸ்வீப் போன்று ஆடி பவுண்டரி அடித்தார் ருதுராஜ். பிறகு சிங்கிள் எடுத்து பிராவோவிடம் கொடுக்க அவர் போல்ட்டை 2 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்தார். பிறகு பிராவோ சிங்கிள் எடுத்து கொடுக்க ருதுராஜ் அடுத்த பந்தை யார்க்கர் சரியாக விழாமல் போக பிளிக்கில் திகைப்பூட்டும் சிக்சரை அடித்தார் ருதுராஜ். அந்த ஓவரில் 24 ரன்கள் வந்தது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா வர அருமையான ஒரு கவர் டிரைவ் பவுண்டரியும் பிறகு கடைசி பந்தை பிளிக் ஸ்வீப் முறையில் ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்ஸும் விளாசினார் ருதுராஜ், 58 பந்துகளில் 88 நாட் அவுட் ,மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ், இது பற்றி அவர் கூறும்போது, “என்னுடைய டாப் இன்னிங்ஸ். கடும் பிரஷரில் இருந்தோம் அதனால் முதலில் கொஞ்சம் நின்று ஆட வேண்டியிருந்தது. 10-12 ஓவர்கள் வரை நின்றால் ஸ்கோரை 120-130க்கு நகர்த்தலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு சாத்தியமானால் 140-150 என்று யோசித்தேன். அணி நிர்வாகம், தோனி எனக்கு முழு ஆதரவு தரும்போது பாசிட்டிவ் தவிர வேறு எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை. ”

    Also Read: CSK vs MI| 140 ரன்கள்தான் வரும் என நினைத்தோம் ருதுராஜ், பிராவோ அட்டகாசம்: தோனி புகழாரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: