முகப்பு /செய்தி /சற்றுமுன் / பணவீக்கத்துக்கும், பருவமழைக்கும் என்ன தொடர்பு?

பணவீக்கத்துக்கும், பருவமழைக்கும் என்ன தொடர்பு?

பணம்

பணம்

தென் மேற்குபருவமழை இயல்பான ஒன்றாக இருப்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் வரவேற்க கூடிய ஒன்றாக உள்ளது

2021ம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீண்ட கால சராசரி அடிப்படையில் 98 விழுக்காடு மழைப்பொழிவை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சராசரிக்கும் மேலான மழைப் பொழிவை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழைக்காலம் வழக்கமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில், தென் மேற்குபருவமழை இயல்பான ஒன்றாக இருப்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் வரவேற்க கூடிய ஒன்றாக உள்ளது. காரணம் என்னவென்றால், பருவமழையானது பண வீக்கத்தை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக உணவு விலைகளில் பருவமழை முக்கிய பங்காற்றுகிறது.

பண வீக்கத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியிட்டு அடிப்படையிலான பணவீக்கம் (CPI) 4.29 சதவீதமாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறைவானது என்றாலும் நாணயக் கொள்கை குழுவின் பண வீக்க வரம்பான 4 (+/-2) சதவீதத்திற்குள் இருந்தது. இது உணவு விலைகள் சீராக இருப்பதற்கு காரணமாக இருந்தது. ஆனால், அதே மாதத்தில் மொத்த விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10.49 சதவீதத்தற்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின் விலைகள் உயர்ந்து 49 மாதங்களில் இல்லாத விலை உயர்வை தொட்டது.

மற்ற நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியதாலும், உலகளாவிய பொருட்களின் விலை அதிகரித்ததாலும் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்ததற்கான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. உணவு விலைகள் குறைவதை இந்த காரணிகளே தடுத்ததாக தெரிவிக்கும் நிபுணர்கள், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 3 விழுக்காடு பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது உணவு அல்லாத மொத்த விலை பணவீக்கம் 15.6 சதவீதமாக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளனர். குறைந்த அடிப்படை விளைவு மற்றும் பொருட்களின் அதிக விலை காரணமாக எதிர்வரும் காலங்களிலும் மொத்த உற்பத்தி பண வீக்கம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் நுகர்வோர் குறியிட்டு பணவீக்கம் வரம்புக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பருவமழை பணவீக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஏப்ரல் மாத பணவீக்கம் தரவு வெளியிடப்படுவதற்கு முன்பு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்ததாஸ், சாதாரணமான தென்மேற்கு பருவமழை உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பண வீக்க அழுத்தத்தையும் குறைக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கமாக தேவை மற்றும் விநியோகத்தில், பருவமழை உணவுப் பொருட்களின் விலையை பாதிக்கும். சாதாரண பருவமழை உணவுப் பொருளின் உற்பத்தியை கொடுக்கும். விவசாயிகள் நீரை சேமித்து பயிரிடும்போது தேவைக்கு ஏற்ப விநியோகமும் சீராக இருந்து விலைகள் மாறாமல் இருக்கும்.

Also Read : ஒரு நாளைக்கு ரூ.7 டெபாசிட் செய்தால் போதும், மாதம் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்

குறைவான மழைப்பொழிவு வறட்சிக்கும், அதிக மழை வெள்ளத்திற்கு வழிவகுக்கும். இது குறுகிய காலத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை ஏற்படுத்தும். சாதாரண பருவக்காலம் சீரான மழைப்பொழிவைக் கொடுத்து உணவு உற்பத்தியில் முங்கிய பங்காற்றும். அந்தவகையில் இந்த ஆண்டு சீரான பருவக்காலமாக உள்ளது. உற்பத்தி அதிகரிக்கும்போது, கிராம புறங்களில் பண புழக்கம் அதிகரிக்கும். அப்போது, அங்கு தேவை அதிகரித்து நுகர்பொருட்களுக்கு ஊக்கமளிக்கிறது. இது உணவு அல்லாத பொருட்களின் மீதான பண வீக்கத்தை பாதிக்கிறது.

தென் மேற்கு பருவமழை இந்தியாவின் மழை சதவீததில் 70 விழுக்காட்டை கொடுத்து, அரிசி, கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்களின் விளைச்சலை தீர்மானிக்கிறது. இந்திய விவசாய பொருளாதாரத்தில் 15 விழுக்காடு. சீரான மழைப்பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுக்கம்பட்சத்தில் உணவுப் பொருட்களின் உற்பத்தி, விலை கட்டுபாடு மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கால் கட்டுப்படுத்தும்.

First published:

Tags: Inflation, Monsoon