ஹோம் /நியூஸ் /Live Updates /

டிக்கெட்டுகள், ட்ரெயின்கள், ஹோட்டல்கள் புக் செய்தோர் அம்போ- ஜேம்ஸ் ஆண்டர்சன் விரக்தி

டிக்கெட்டுகள், ட்ரெயின்கள், ஹோட்டல்கள் புக் செய்தோர் அம்போ- ஜேம்ஸ் ஆண்டர்சன் விரக்தி

ஆன்டர்சன்

ஆன்டர்சன்

லங்காஷயர் மைதானமான ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டி கோவிட் காரணமாக ரத்தானதையடுத்து தன் சொந்த மைதானத்தில் ஆட முடியாது போனதும் இனி தான் தன் சொந்த மண்ணில் சர்வதேச போட்டியில் எப்போது களமிறங்க முடியுமோ என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Cricketnext
  • 2 minute read
  • Last Updated :

லங்காஷயர் மைதானமான ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டி கோவிட் காரணமாக ரத்தானதையடுத்து தன் சொந்த மைதானத்தில் ஆட முடியாது போனதும் இனி தான் தன் சொந்த மண்ணில் சர்வதேச போட்டியில் எப்போது களமிறங்க முடியுமோ என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

மிகவும் பிரமாதமான இந்த டெஸ்ட் தொடர் இப்படி முடிந்திருக்கக் கூடாது, ரசிகர்களுக்கும் கடும் ஏமாற்றம், தனக்கும் ஏமாற்றம், இங்கிலாந்து இந்திய அணிகளுக்குமே ஏமாற்றம் என்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இறுதி டெஸ்ட் இந்திய அணியின் ஜூனியர் பிசியோ கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து ரத்தானது, இந்த டெஸ்ட் போட்டி பிறகு நடத்தப்பட வாய்ப்பிருப்பதால் இப்போதைக்கு இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்றும் ஹோட்டல், ட்ரெயின், டிக்கெட்டுகள் என்று புக் செய்த ரசிகர்களுக்காகவும் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “லங்காஷயர் கிரிக்கெட்டில் இருக்கும் அனைவருக்குமாகவும் நான் வருந்துகிறேன். ரயில்கள், டிக்கெட்டுகள், ஹோட்டல் அறைகளுக்காக முன் கூட்டியே புக் செய்த ரசிகர்களுக்காகவும் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். இருதரப்பு ரசிகர்களுமே இந்தத் தொடர் முழுதும் முடிவதைப் பார்க்க தகுதி உடையவர்களே.

இந்த டெஸ்ட் போட்டி பிற்பாடு நடைபெறும். என்னுடைய சொந்த மண்ணில், நான் விரும்பும் என் ஊரில் ஆடுவேன் என்று நம்புகிறேன்” என்றார். இந்திய அணியினர் ஆடாதது குறித்து ஐபிஎல் தொடர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நாசர் ஹுசைன் போன்றவர்கள் பயோபபுள், நெருக்கமான அட்டவணை ஆகியவையே காரணம் என்று கூறியுள்ளனர்.

ஆதர்டன், மைக்கேல் வான் போன்றோர் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது போய் விடுமோ என்று இந்திய வீரர்கள் தொடரைக் கைவிட்டனர் என்று கூறினர். இங்கிலாந்தின் மூன்று வீரர்கள் இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர். இந்த ரத்தினால் இங்கிலாந்து வீரர்கள் கொதிப்படைந்தனர், மான்செஸ்டரில் இந்திய வீரர்கள் பொறுப்பற்று சுற்றித் திரிந்ததாக குற்றம் சாட்டினர்.

சுனில் கவாஸ்கர் 26/11 தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்து சென்ற அந்த அணி பிறகு டூரை மதித்து டெஸ்ட் போட்டிக்காக திரும்பி வந்தனர் என்பதை பிசிசிஐ மறக்கக் கூடாது என்று ஆலோசனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: India Vs England, James anderson