இரண்டாவது தாய் வீடு சேப்பாக் உங்களை மிஸ் செய்கிறது - பேனருடன் தோனி ரசிகர்கள்

பேனருடன் தோனி ரசிகர்கள்

India vs England | MS Dhoni | 2014 ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார்.

  • Share this:
சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வந்த தோனி ரசிகர்கள் " சேப்பாக் மிஸ்ஷஸ் யு தோனி"  என்ற பேனருடன் வந்திருந்தனர்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பது சொந்த மைதானமாகவே பார்க்கப்படுகிறது. தோனியே சில பேட்டிகளில் சென்னை எனக்கு சொந்த ஊர் போன்றது என தெரிவித்திருந்தார். அதன் வெளிப்பாடாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சேப்பாக்கத்தில் தோனியை மிஸ் செய்கிறோம் என்ற பேனருடன் போட்டியை பார்க்க வந்திருந்தனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்க 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 14 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

2014 ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வந்தார். அவருக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. கொரோனோ வைரஸ் பரவலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் சேப்பாக்கத்தில் நடைபெறாததால் இரண்டாவது தாய் வீடு சேப்பாக்கம் உங்களை மிஸ் செய்கிறது. சேப்பாக் மிஸ்ஷஸ் யு தோனி என தோனி ரசிகர்கள் பேனருடன் போட்டியை காண வந்திருந்தனர்.
Published by:Vijay R
First published: