7 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருந்த சேப்பாக்கம் ஐ, ஜே, கே கேலரிகளில் ரசிகர்களுக்கு அனுமதி

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கடந்த வருடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும் இணைந்து  தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெற்று இந்த மூன்று கேலரிக்கும் அனுமதி பெற்றுத் தந்தனர்.

  • Share this:
நீண்ட நாட்களாக தடைவிதிக்கப்பட்டு ரசிகர்கள் இல்லாமல் கலையிழந்திருந்த சேப்பாக் மைதானத்தின் ஐ.ஜே.கே கேலரி  இந்ததியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில்    ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உற்சாகத்தோடு காட்சியளிக்கிறது.

2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சேப்பாக்கத்தில் கூடுதலாக ஐ.ஜே.கே கேலரி கட்டப்பட்டது.
12,000 இருக்கைகள் கொண்ட இந்த மூன்று கேலரியும் சென்னை மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என கூறி தமிழக அரசு கடந்த 2012 ம் ஆண்டு சீல் வைத்தது.
நீதிமன்றத்தில் முறையிட்டதால் உயர் நீதிமன்றத்தால் திரும்ப திருக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் சீல் வைக்கப்பட்டது.   கடைசியாக கடந்த 2012 ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்பின் இந்த மூன்று கேலரிகளும்  7 வருடங்களாக காட்சிப்பொருளாக இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த வருடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும் இணைந்து  தமிழக அரசிடம் முறையாக அனுமதி பெற்று இந்த மூன்று கேலரிக்கும் அனுமதி பெற்றுத் தந்தனர். கொரோனோ காலத்திற்கு பிறகு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி என்பதால் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.ஜே.கே கேலரி ரசிகர்களோடு உற்சாகம் கலந்த கம்பீரத்தோடு காட்சியளிக்கிறது.

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில், கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசி அதிரடியாக விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது 187 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 131 ரன்களுடனும், ரஹானே 31 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Published by:Vijay R
First published: