India vs England,3rd test: 4-வது இன்னிங்ஸ் பேட்டிங் சொர்க்கபுரி பிட்சில் இந்தியா முதலில் பேட்டிங்

3வது டெஸ்ட் பிட்ச், ஹெடிங்லீ பிட்ச். இந்தியா பேட்டிங்

ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு டாஸில் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

  • Share this:
    ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு டாஸில் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

    இந்திய அணியில் மாற்றமில்லை, இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன் ஆகியோர் அணிக்கு வந்துள்ளனர்.

    டாஸ் வென்று விராட் கோலி கூறும்போது, “பிட்ச் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது, எனவே முதலில் பேட் செய்து ரன்களை முதலில் குவித்து வைத்துக் கொண்டால் நல்லது.” என்றார்.

    Also Read: ரன்கள் எடுக்க வேண்டும் என்று கோலிக்கும் கூட விருப்பம் இருக்கும்: முட்டுக் கொடுக்கும் அகார்க்கர்

    அஸ்வினுக்கு இடமில்லை. முற்றொழிப்பு செய்து விடுவார் போலிருக்கிறது. வெற்றிக் கூட்டணியை மாற்றக்கூடாது என்ற ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது. அந்த நம்பிக்கையை கோலியும் தொடர்கிறார், இல்லையெனில் ஜடேஜா அணியில் இருப்பதற்கான எந்த ஒரு நியாயமும் இல்லை.

    இந்த பிட்ச் பெரும்பாலும் தட்டையாகி விடும், மட்டையாளர்களுக்கே உதவி கரமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு 2017-ல் 4வது இன்னிங்சில் 322 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 490 ரன்கள் எடுத்துத் தோற்றது.

    இங்குதான் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டியில் 359 ரன்களை விரட்டி 135 நாட் அவுட் என்று ஹீரோவானார். 286/9லிருந்து பென் ஸ்டோக்ஸ் வெற்றி பெறச் செய்தார், இவருடன் நின்ற ஜாக் லீச் 1 ரன்னை மட்டுமே எடுத்ததும் நினைவிருக்கலாம்.

    4வது இன்னிங்ஸ் பேட்டிங் சொர்க்கபுரி என்று ஹெடிங்லே அழைக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கோலி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: