₹ 40 மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறையை எதிர்நோக்கும் அரசு ஊழியர் - சாதாரண ₹ 40 அல்ல... அப்படி என்ன சிறப்பு...?

₹ 40 மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறையை எதிர்நோக்கும் அரசு ஊழியர் - சாதாரண ₹ 40 அல்ல... அப்படி என்ன சிறப்பு...?
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: July 29, 2020, 12:45 PM IST
  • Share this:
மும்பையில் நாணயங்களை அச்சடிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சபுக்ஸ்வார் என்ற ஊழியரின் டேபிள் லாக்கரில் இருந்து சமீபத்தில் இரண்டு ₹ 20 ரூபாய் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சபுக்ஸ்வாரின் டேபிள் லாக்கரில் உயரதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 20 ரூபாய் நாணயங்களை கைப்பற்றியுள்ளனர்.

சுவாரஸ்யம் என்னவென்றால் 20 ரூபாய் நாணயம் இன்னும் புழக்கத்திற்கு வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசு புதிய நாணயங்களை வெளியிட்டது. பல மாற்றங்களைக் கொண்ட ₹1, 2, 5 மற்றும் 10 ஆகிய நாணயங்கள் வெளியிடப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளது.


அப்போது, புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாணயங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
படிக்க: நடிகை வனிதா மீது போலீஸ் வழக்குப்பதிவுபடிக்க: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தைக் கடந்த 5 மாநிலங்களில் மூன்று தென் மாநிலங்கள்

படிக்க: கமலைப் புறக்கணித்தார்கள்: தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் - பாலிவுட் குறித்து கருணாஸ் ஆதங்கம்
நாணயங்களை அச்சடிக்கும் நிறுவனமானது மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் நொய்டாவில் இயங்கிவருகிறது.  நாணயங்கள் தவிர, பாதுகாப்பு மற்றும் போலீஸ் பதக்கங்கள் இங்கு செய்யப்படுகின்றன.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading