இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - 24 மணிநேரத்தில் 22,854 பேர் பாதிப்பு

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பெண்களை விட மூன்று மடங்கு தீவிர சிகிச்சை (Men infected with Covid-19 are three times more likely to require Intensive Care than Women) தேவைப்படுவதோடு வைரஸால் இறக்கும் அபாயமும் அதிகம் என்று விஞ்ஞானிகள் கடந்த புதனன்று தெரிவித்தனர். ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 1, 2020 என்ற இடைப்பட்ட காலத்தில் 46 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவின் 44 மாநிலங்களிலிருந்தும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இந்தியாவில் இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நபர், தென்னாப்பிரிக்காவின் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், நோய் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி 22,273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 2 முறை மட்டுமே, நாளொன்றுக்கு 20,000-க்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி இருந்தது.இந்நிலையில், இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில், 22,854 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 13,000 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றாததே நோய் தொற்று அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.தானே மாவட்டத்தில் மார்ச் 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

  நாக்பூரில் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.பஞ்சாப் , கேரளா, குஜராத், தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

  கர்நாடகா மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 456 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களில் 64 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவின் உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் அவருக்கு செலுத்தப்பட்டது.இதேபோல், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
  Published by:Ramprasath H
  First published: