தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

ஆய்வு

சென்னை 41 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்து  தற்போது 82 சதவீத  எதிர்ப்புத்திறனை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 40 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக  குறைந்து தற்போது 84 சதவீதமாக உயர்ந்துள்ளது

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக  பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

  கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட முதல் ஆய்வில் 31 சதவீதம் எனவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இரண்டாவது ஆய்வில் 29 சதவீதம் எனவும் கொரோனா எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா சமூக நோய் எதிர்ப்புத்திறன் எவ்வளவு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக 3 ஆம் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. 26,610 மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. மொத்தமாக, தமிழகத்தில் 66.2 சதவீதம் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியுள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதமும் , ஈரோட்டில் 37 சதவீதமும் நோய் எதிர்ப்புத்திறன் கண்டறியப்பட்டுள்ளது.

  படிக்க : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!


  முதற்கட்ட ஆய்வில் 49 சதவீதம்  என அதிகபட்ச எதிர்ப்புத்திறன் கண்டறியப்பட்ட பெரம்பலூர் 2 ஆம் கட்ட ஆய்வில் 28 சதவீதமாக குறைந்து தற்போது 58 சதவீதமாக   உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முதல் கட்ட ஆய்வில் 34 சதவீதம், இரண்டாம் கட்ட ஆய்வில் 49 சதவீதம் என அதிக எதிர்ப்புத்திறன் பெற்று தற்போது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

  இதையும் படிங்க: மது குடிப்பதால் 200 வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..


  இதே போல், சென்னை 41 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்து  தற்போது 82 சதவீத  எதிர்ப்புத்திறனை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 40 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக  குறைந்து தற்போது 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரண்டாம் அலை உச்சத்திலிருந்த நேரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதும், 97.6 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி முடித்திருந்த நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால்  எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கலாம் என காரணம் கூறப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது மிக முக்கிய பலனித்துள்ளதுள்ளது என ஆய்வு கூறுகிறது.

  மேலும் படிக்க: தடையை மீறி செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடை: மாநகராட்சி எச்சரிக்கை!


  மேற்கு மாவட்டங்களாகிய ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகியவற்றில் 45 சதவீதம் தான் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியுள்ளது என்பதால் அங்கு கூடுதல் கவனம் தேவை என்று கணிக்கப்பட்டுள்ளது.

   
  Published by:Murugesh M
  First published: