முகப்பு /செய்தி /Live Updates / ICC Ranking | கேன் வில்லியம்சனை முந்திய ஜோ ரூட் முதலிடம், கோலியை முந்திய ரோகித் சர்மா- ஐசிசி டெஸ்ட் தரவரிசை

ICC Ranking | கேன் வில்லியம்சனை முந்திய ஜோ ரூட் முதலிடம், கோலியை முந்திய ரோகித் சர்மா- ஐசிசி டெஸ்ட் தரவரிசை

டெஸ்ட் நம்பர் 1 பேட்ஸ்மென் ஜோ ரூட்.

டெஸ்ட் நம்பர் 1 பேட்ஸ்மென் ஜோ ரூட்.

இந்தியா-இங்கிலாந்து தொடரில் ஓரளவுக்கு சுமாராக ஆடி வரும் ரோகித் சர்மா, மிக மோசமாக ஆடிவரும் விராட் கோலியை ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முந்தினார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடம் சென்றார்.

  • Last Updated :

இந்தியா-இங்கிலாந்து தொடரில் ஓரளவுக்கு சுமாராக ஆடி வரும் ரோகித் சர்மா, மிக மோசமாக ஆடிவரும் விராட் கோலியை ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முந்தினார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடம் சென்றார்.

கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அபாரமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் ஹாட்ரிக் சதங்களை எடுத்துள்ளார்.

ஹாட்ரிக் சதமடித்த ஜோ ரூட்.

இந்த ஆண்டில் 6 சதங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் ஜோ ரூட். இந்தத் தொடர் தொடங்கும் முன்பு 5ம் இடத்தில் இருந்தார்.

இதைவிடவும் விஷயம் என்னவெனில் ரோகித் சர்மா 773 புள்ளிகளுடன் 5ம் இடம் பிடிக்க 766 புள்ளிகளுடன் கிங் கோலி 6ம் இடத்துக்குச் சரிந்தார். டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக ரோகித் சர்மா 5ம் இடத்துக்கு வருகிறார். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் 230 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 124 ரன்களைத்தான் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மா

இன்னொரு பெரிய சரிவு ரிஷப் பந்த் 8ம் இடத்திலிருந்து 12ம் இடத்துக்கு பின்னடைவு கண்டார். இங்கிலாந்து அவருக்கு சுத்தமாக புரியவில்லை.

பேட்டிங் தரவரிசை:

1. ஜோ ரூட் - 916 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் - 891 புள்ளிகள்

3. ஸ்டீவ் ஸ்மித் - 891 புள்ளிகள்

4. லபுஷேன் - 878 புள்ளிகள்

5. ரோகித் சர்மா- 773 புள்ளிகள்

6. விராட் கோலி - 766 புள்ளிகள்

7. பாபர் அசாம்- 749 புள்ளிகள்

8. டேவிட் வார்னர்- 724 புள்ளிகள்

9 குவிண்டன் டி காக் 717 புள்ளிகள்

10. ஹென்றி நிகோல்ஸ் - 714 புள்ளிகள்

புஜாரா 91 ரன்களை ஹெடிங்லியில் எடுத்ததால் 15ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

புஜாரா

பந்து வீச்சுத் தரவரிசையில் அஸ்வின் 2ம் இடத்தில் உள்ளார், ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேறி டாப் 10-க்கு மீண்டும் வந்துள்ளார். 3 மேட்ச்களில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.

ஜடேஜா ஆல்ரவுண்டர் டேபிளில் 4ம் இடத்திலும் அஸ்வின் 5ம் இடத்திலும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: ICC Ranking, Joe Root, Kane Williamson, Rohit sharma, Virat Kohli