சரிந்து கொண்டே செல்லும் விராட் கோலி, முன்னேறிக் கொண்டே இருக்கும் ஜோ ரூட்: ஐசிசி தரவரிசை வெளியீடு

ரூட் - கோலி

கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், மார்னஸ் லபுஷேன், விராட் கோலி, பாபர் ஆஸம், புஜாரா, ஹென்றி நிகோல்ஸ் (நியூஸி.), பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர்.

 • Share this:
  சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதையடுத்து அதற்கு தன் அபார இரட்டைச் சதம் மூலம் நங்கூரம் பாய்ச்சிய கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசையில் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  மாறாக தோல்வி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் 5ம் இடத்துக்குச் சரிந்துள்ளார்.

  பவுலிங் தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சென்னை டெஸ்ட் போட்டியில் தார்ச்சாலையாக இருந்த முதல் 2 நாள் பிட்சில் ஜோ ரூட் 218 ரன்களை விளாசினார்.

  தன் 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் கண்டு சாதனை புரிந்த அவர் 100வது டெஸ்ட்டில் அதிக ரன்களிக் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.

  நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்துள்ளார். 4ம் இடத்தில் இருந்த விராட் கோலி 5ம் இடத்துக்கு சரிவு கண்டுள்ளார், புள்ளிகள் 852.

  சென்னை டெஸ்ட் போட்டியில் கோலி 11 மற்றும் 72 ரன்களை எடுத்தார். 5ம் நாள் கடினமான பிட்சில் பிரமாதமாக ஆடி கடைசியில் பென் ஸ்டோக்ஸின் கணுக்காலுக்குக் கீழ் சென்ற பந்தில் பவுல்டு ஆனார்.

  புஜாரா மட்டுமே மற்றுமொரு இந்திய பேட்ஸ்மென் டாப் 10-ல் இருக்கிறார். சென்னை டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 88 ரன்கள் எடுத்த புஜாரா 7ம் இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  பேட்டிங் தரவரிசை வருமாறு:

  கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், மார்னஸ் லபுஷேன், விராட் கோலி, பாபர் ஆஸம், புஜாரா, ஹென்றி நிகோல்ஸ் (நியூஸி.), பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர்.

  ரிஷப் பந்த் பேட்டிங்கில் 600 தரவரிசைப் புள்ளிகளுடன் 13ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இளம் நட்சத்திரம் ஷுப்மன் கில் 7 இடங்கள் முன்னேறி 40வது இடம் சென்றுள்ளார்.

  பவுலிங் தரவரிசையில் பும்ரா 8ம் இடத்திலும் அஸ்வின் 7ம் இடத்திலும் உள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: