’சக்கர நாற்காலியில் வந்து பிரச்சாரம் செய்வேன்’ - மம்தா பானர்ஜி

’சக்கர நாற்காலியில் வந்து பிரச்சாரம் செய்வேன்’ - மம்தா பானர்ஜி

மமதா பானர்ஜி

நான் சொன்ன வாக்கை மாற மாட்டேன் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என கடந்த சில நாள்களுக்கு முன்பு மம்தா அறிவித்தார்.

  • Share this:
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே யார் ஆட்சியை பிடிப்பதில் என்பது கடும் போட்டி நிலவி வருகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தாவை நிற்க சொல்லுங்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கிறோம் என உள்ளூர் பாஜகவினர் சவால் விடுத்தனர். நந்திகிராம் தொகுதியில் கடந்த முறை மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிப்பெற்றது. நந்திகிராம் திரிணாமூல் எம்.எல்.ஏ கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாஜகவின் ஐக்கியமாகிவிட்டார். நந்திகிராம் தொகுதியில் நிற்பதாக மம்தா முன்னரே வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில்தான் மம்தாவை நந்திகிராம் தொகுதியில் முடிந்தால் நிற்க சொல்லுங்கள் என உள்ளூர் பாஜக சவால் விடுத்தது.

நான் சொன்ன வாக்கை மாற மாட்டேன் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என கடந்த சில நாள்களுக்கு முன்பு மம்தா அறிவித்தார். இதனையடுத்து நந்திகிராம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் மம்தா ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கோயிலில் பிரார்த்தனை செய்ய சென்றிருந்தார். அங்கிருந்து காருக்கு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கியதாகவும் தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் மம்தா கூறினார். மம்தா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மம்தா போன்ற ஒரு வலிமையான முதல்வரையே தாக்குகிறார்கள் என்றால் நாடு எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது என கேள்வியை பல்வேறு அரசியல் கட்சியினரும் முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மம்தா கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. அவருக்கே பாதுக்காப்பு இல்லையென்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கும் மம்தா தொண்டர்களுக்காக வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ,” நான் நேற்று கடுமையாக காயமடைந்தேன் என்பது உண்மை. கை மற்றும் கால்களில் வலியை உணர்கிறேன். நேற்று தலை மற்றும் மார்பு பகுதியில் வலியை உணர்ந்தேன். என்னையை கடுமையாக தள்ளினர் என்னுடைய கால்கள் காரில் கடுமையாக மோதியது. அனைவரும் அமைதியை காக்க வேண்டும் என விரும்புகிறேன். அசவுகரியமான எந்த செயலையும் யாரும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு, மூன்று நாள்களில் வீடு திரும்பிவிடுவேன் என நம்புகிறேன். எனக்கு சில பிரச்னைகள் இருக்கிறது நான் சமாளித்துவிடுவேன். எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டாம். சில நாள்களில் நான் பிரசாரத்துக்கு வந்துவிடுவேன். சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என உருக்கமாக கூறியுள்ளார்.
Published by:Ramprasath H
First published: