PAK vs SA | டி காக் ஏமாற்றவில்லை, நான் தான் ஏமாந்தேன் - உலக சாதனை மன்னன் ஃபக்கர் ஜமான் பெருந்தன்மை

PAK vs SA | டி காக் ஏமாற்றவில்லை, நான் தான் ஏமாந்தேன் - உலக சாதனை மன்னன் ஃபக்கர் ஜமான் பெருந்தன்மை

ஃபக்கர் ஸமான்

ஜொகான்னஸ்பர்க் ஒருநாள் போட்டியில் நேற்று 193 ரன்கள் என்ற அசாத்தியமான அதிரடி இன்னிங்ஸ் ஆடி சாதனை புரிந்த பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான், வழக்கத்துக்கு விரோதமான ஒரு சூழ்நிலையில் ரன் அவுட் ஆனார்.

  • Share this:
ஜொகான்னஸ்பர்க் ஒருநாள் போட்டியில் நேற்று 193 ரன்கள் என்ற அசாத்தியமான அதிரடி இன்னிங்ஸ் ஆடி சாதனை புரிந்த பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான், வழக்கத்துக்கு விரோதமான ஒரு சூழ்நிலையில் ரன் அவுட் ஆனார்.

இதனால் 2வது முறையாக ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்திருக்கும் வாய்ப்பை இழந்தார் ஃபக்கர் ஜமான்.  ஆனால் இலக்கை விரட்டும்போது அதிகபட்ச ஸ்கோரை எடுத்து உலக சாதனை புரிந்தார் ஃபக்கர் ஜமான். இதற்கு முன்பாக ஷேன் வாட்சன் 185 ரன்களை விரட்டலின் போது விளாசினார், அதை நேற்று ஜமான் 193 ரன்கள் அடித்து உடைத்தார்.

ஃபக்கர் ஸமான்


லாங் ஆனுக்கு தட்டி விட்டு வேகமாக ரன்களுக்கு ஓடும்போது லாங் ஆன் பீல்டர் மார்க்ரம் பந்தை நேராக கீப்பர் முனைக்கு விட்டெறிந்தார். பகார் ஜமான் கிட்டத்தட்ட கிரீஸ் பக்கம் வந்து விட்டார், ஆனால் அப்போது குவிண்டன் டி காக் பவுலர் முனைக்கு அடி என்பது போல் செய்கை செய்ய, அதை ஓடி வந்து கொண்டே திரும்பிப் பார்த்தார் ஃபக்கர் ஜமான், இதனையடுத்து ஓட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது, பந்து நேராக விக்கெட் கீப்பர் முனை ஸ்டம்பை தாக்கியது மிக அருமையான த்ரோ.

ரன் அவுட் ஆனார் ஃபக்கர் ஜமான். பவுலரிடம் லாங் ஆன் த்ரோ வருவதாக டி காக் செய்த செய்கையினால் ஃபக்கர் ஜமான் குழம்பிப் போய் திரும்பிப் பார்த்ததில் சில அடிகள் பின் தங்கி ரன் அவுட் ஆனார்.

இதில் விஷயம் என்னவெனில் டி காக் செய்கை வேண்டுமென்றே திசைத்திருப்பும் விதமாக இருந்தால் அது விதிமீறல். 5 பெனால்ட் ரன்களும், அந்தப் பந்தை மீண்டும் வீசவும் வேண்டும் என விதிகள் கூறுகின்றன.

ரன் அவுட் ஆன உலக சாதனை மன்னம் ஃபக்கர் ஜமான்.


இந்நிலையில் ஃபக்கர் ஜமான் கூறும்போது, “தவறு என்னுடையதுதான். எதிர்முனையில் ஹாரிஸ் ராவுஃப் ரீச் செய்கிறாரா என்பதிலேயே என் கவனம் சென்றதால் தவறு என்னுடையதுதான், ஏனெனில் ராவுஃப் அந்த ரன்னுக்கு சற்றே தாமதமாகப் புறப்பட்டார். எனவே அவர்தான் பிரச்னையில் இருக்கிறார் என்று நான் கருதினேன். மற்றவை ஆட்ட நடுவர் என்ன கூறுகிறாரோ அதுதான், ஆனால் இது நிச்சயம் டி காக்கின் தவறு அல்ல” என்று ஃபக்கர் ஜமான் மிகவும் பெருந்தன்மையாக டி காக்கை தன் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார்.

இந்த ரன் அவுட் சம்பவம் மட்டும் நடைபெறவில்லை எனில் அவர் நேற்று 2வது ஒருநாள் இரட்டைச் சதம் விளாசியிருப்பார். மேலும் கடைசி ஓவரில் 31 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் டி காக் வேண்டுமென்றே வீரரின் கவனத்தை திசைத்திருப்பினார் என்பது விதிமீறல் என்றால் 5 பெனால்டி ரன்களுடன் பந்தை மீண்டும் வீச நேரிட்டிருக்கும் அப்போது பாகிஸ்தானுக்கு 6 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். பாகிஸ்தான் அசம்பாவிதமாக 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பெருந்தன்மையாக ஜமான், டி காக்கை விடுவித்தாலும் ஆட்ட நடுவர் எப்படிப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து ஆட்டத்தின் முடிவு எப்படி அமையும் என்பது தெரியவரும்.
Published by:Muthukumar
First published: