விவசாய நிலங்களில் காட்டு பன்றிகளின் அட்டகாசம்... இழப்பீடு கோரும் விவசாயிகள்
புதுச்சேரி கிராமப்பகுதிகளில் காட்டு பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாய நிலங்களில் காட்டு பன்றிகளின் அட்டகாசம்...
- News18 Tamil
- Last Updated: May 31, 2020, 3:05 PM IST
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனூர், வம்புபட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி, கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு பகுதிகளில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் பெருமளவில் இருந்தது. அது தற்போது பரந்து விரிந்து திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வந்து அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வருகிறது.
குறிப்பாக சோம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர் நான்கு மாத பயிர்களாக உள்ளது. தற்போது மரவள்ளி வேர்கள் கிழங்குகள் ஆக மாறி வருகிறது. இந்த சூழலில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து மரவள்ளி வாய்க்கால் வரப்புகளில் தோண்டி எடுத்து மரவள்ளி சாப்பிடுவதுடன், இந்த செடியை எடுத்து வெளியே போட்டு விடுகிறது. இதனால் ஏராளமான மரவள்ளி செடிகள் நிலத்தில் கிடைக்கிறது. அதுதவிர செடியை வேர்களை பறித்து கிழங்கை மட்டுமே சாப்பிட்டு செல்லுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 முதல் 200 செடிகளை பிடுங்கி போட்டுவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த வேளாண் துறை மற்றும் வனத்துறை இணைந்து காட்டுப்பன்றிகளை பிடித்து காடுகளில் கொண்டு சென்றுவிட ஏற்பாடு செய்யவேண்டும். காட்டு பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசு விவசாயிகளின் நலன் கருதி காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
பல்வேறு வகைகளில் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். உர விலை ஏற்றம், கூலியாட்கள் பற்றாக்குறை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளின் அட்டகாசம் மேலும் ஒரு சுமையாக உள்ளது.அரசு, இதனை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு விவசாயிகளின் உண்மை நிலையை அறிந்து பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also see...
வலிமை படத்தின் ஷூட்டிங் நிலவரம் - போனி கபூர் கொடுத்த புதிய அப்டேட்
சென்னையில் குடிசைப் பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி
கடந்த சில ஆண்டுகளாக செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு பகுதிகளில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் பெருமளவில் இருந்தது. அது தற்போது பரந்து விரிந்து திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வந்து அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வருகிறது.
குறிப்பாக சோம்பட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர் நான்கு மாத பயிர்களாக உள்ளது. தற்போது மரவள்ளி வேர்கள் கிழங்குகள் ஆக மாறி வருகிறது. இந்த சூழலில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து மரவள்ளி வாய்க்கால் வரப்புகளில் தோண்டி எடுத்து மரவள்ளி சாப்பிடுவதுடன், இந்த செடியை எடுத்து வெளியே போட்டு விடுகிறது.